மருத்துவம் :: உள்ளம்
41. ஏது காட்டல் என்றால் என்ன?
ஒன்றைச் செய்தபின் அதைச் சரி என நிலைநாட்டக் காரணங்கள் கூறுதல்.
42. அடையாளமறிதல் என்றால் என்ன?
ஒருவரிடம் அமையும் உள எழுச்சிப்பற்று. நடத்தை இயல்புகள் மாறியமைவதால் ஏற்படுவது.
43. அடைவு என்றால் என்ன?
பலவகைச் செயல்களில் அருந்திறம் பெற்றிருத்தல். எ-டு ஒவியம் வரைதல், புதியன அமைத்தல்.
44. அடைவுத் தேர்வு என்றால் என்ன?
குழந்தைகளின் திறன்களை அறிய நடத்தப்படும் தேர்வு.
45. கால அகவை என்றால் என்ன?
வழக்கமாகக் கணக்கிடப்படும் வயது.
46. உள அகவை என்றால் என்ன?
நுண்ணறிவு ஆய்வில் பெற்ற மதிப்பெண்ணுக்குப் பொருத்தமான ஆய்வு.
47. முன்புலனறிவு என்னும் சொல்லை உருவாக்கியவர் யார்?
ஜெர்மானிய மெய்யறிவாளர் காப்பிரெப்டு லெய்பின்ஸ் உருவாக்கினார்.
48. முன்புலனறிவு என்றால் என்ன?
நாம் முன்னரே பெற்றுள்ள பட்டறிவைச் சார்ந்தது.
49. இதன் வகைகள் யாவை?
1. நெடுங்கால முன்புலனறிவு. இது ஆளுமையின் நிலைப் பண்புகளைச் சாாந்தது. எ-டு உலகப் பார்வை.
2. குறுங்கால முன் புலனறிவு. சூழந்துள்ள உளநிலைகளைப் பொறுத்தது இது. எ-டு எதிர்பார்ப்புகள், பான்மைகள்.
50. முன்புலனறிதிரள் என்றால் என்ன?
நம்மிடம் முன்னரே நிலைத்துள்ள பழைய அறிவு. அதன் வழி புது அறிவு உண்டாதல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உள்ளம் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, முன்புலனறிவு