கணிதம் :: மாறி மடக்கை திசைச்சாரி
31. திசைச்சாரியின் வகைகள் யாவை?
1. சுழித் திசைச்சாரி - வெற்றுத் திசைச்சாரி.
2.அலகுத் திசைச்சாரி - ஒரு திசைச்சாரியின் எண்அளவு 1.
3. நிலைத் தசைச்சாரி - ஆயத்தொலைவடிவக் கணக்கில் புள்ளிகளின் நிலைத் திசைச்சாரிகள் ஆயத்தொலைகளாகப் பயன்படுகின்றன.
4. சமத்திசைச்சாரி - திசைச்சாரி a யும் b யும் ஒரே திசையையும் பெற்றிருந்தால், அவை இரண்டும் சமத்திசைச்சாரிகள் எனப்படும் = என்று குறிக்கப்படும்.
32. அலகுத் திசைச்சாரி என்றால் என்ன?
ஓரலகு எண்ணளவுள்ள திசைச்சாரி. r என்னும் எந்தத் திசைச்சாரியும் அதன் எண்ணளவான r என்னும் திசையிலி அளவால் தெரிவிக்கப்படும்.
33. ஒரு கோடமை திசைச்சாரி என்றால் என்ன?
இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சுழியில்லாத திசைச்சாரிகள் ஒரே நேர்க்கோட்டிற்கு இணையாக இருக்குமானால், அவை ஒரு கோடமை திசைச்சாரியாகும்.
34. நிலைத் திசைச்சாரி என்றால் என்ன?
கொடுக்கப்பட்ட பார்வைத் தொடக்கப் புள்ளியிலிருந்து ஒரு புள்ளியின் இடப்பெயர்ச்சியைக் குறிக்கும் திசைச்சாரி P என்னும் புள்ளி முனை ஆயங்களைக் கொள்ளுமானால், பின் P இன் நிலைத் திசைச்சாரி r ஆகும். r என்னும் திசைச்சாரி அளவு அச்சுக்கோடு கோணம் θ வை உண்டாக்கும்.
35. பகுதித் திசைச்சாரிகள் என்றால் என்ன?
கொடுக்கப்பட்ட திசைச்சாரியின் பகுதிகள் (விசை, நேர்விரைவு) கொடுக்கப்பட்ட திசைச்சாரியைப் போல் ஒரே விரைவுள்ள இரண்டிற்கு மேற்பட்ட திசைச் சாரிகளே.
36. நிரல் திசைச்சாரி (column vector) என்றால் என்ன?
நிரலணி. பல அளவுகள் (m) ஒரு தனிப்பத்தியில் அமைந்திருக்கும். அதாவது mx1 அணி, எ-டு. கார்ட்டீசியன் ஆயத்தொகுதியின் தொடக்கப்புள்ளி இடப் பெயர்ச்சிப் புள்ளியை (x,y, z) வரையறை செய்யும் திசைச்சாரி, வழக்கமாக நிரல் திசைச்சாரியாக எழுதப்படும்.
37. வரிசைத் திசைச்சாரி என்றால் என்ன?
வரிசையணி. n என்னும் பல அளவுகள் ஒரு வரிசையில் அமைதல். அதாவது 1 x n அணி, எ-டு. கார்ட்டீசியன் ஆயமுறையில் 3 அச்சுகள் கொண்ட ஒரு புள்ளியில் ஆயங்கள் 1×3 வரிசைத் திசைச்சாரியாக (x, y, z) அமையும்.
38. திசைச்சாரிக் கூட்டுத்தொகை என்றால் என்ன?
இரு திசைச்சாரிகளைக் கூட்டுவதால் ஏற்படும் பலன்.
39. இக்கூட்டுத்தொகையை எவ்வாறு காணலாம்?
1. ஒவ்வொரு தனித் திசைச்சாரியின் ஒத்த பகுதிகளின் எண்ணளவுகளாகக் கூட்டித் திசைச்சாரிக் கூட்டுத் தொகை காணலாம்.
2. திசைச்சாரிப் படத்தில் தலையிலிருந்து அடிக்கு வரைந்து திசைச்சாரிகளைக் கூட்டலாம்.
40. ஆரத்திசைச்சாரி என்றால் என்ன?
ஒரு முனை ஆயத்தொகுதியில் தொடக்கப் புள்ளியிலிருந்து ஒரு புள்ளியின் திசையையும் தொலைவையுங் குறிக்கும் திசைச்சாரி.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மாறி மடக்கை திசைச்சாரி - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - திசைச்சாரி, என்ன, என்றால், நிலைத், திசைச்சாரியின், கொடுக்கப்பட்ட, திசைச்சாரிகள், என்னும்