கணிதம் :: மாறி மடக்கை திசைச்சாரி
(1) மாறி
1. மாறி என்றால் என்ன?
மாறும் அளவு. வழக்கமாக, இயற்கை கணக்குச் சமன்பாடுகளில் x,y என்னும் எழுத்தால் குறிக்கப்படும்.
2. மாறியின் வகைகள் யாவை?
1. சமவாய்ப்பு மாறி. 2. தனித்த சமவாய்ப்பு மாறி. 3. தொடர் சமவாய்ப்பு மாறி 4. தொகைமாறி.5. சாராமாறி. 6. திசைச்சாரிமாறி. 7. அணிமாறி.
3. இருமாறு என்றால் என்ன?
இருமாறி அளவுகளைக் கொண்டுள்ளது. எ-டு. தளத் திசைச்சாரி இருமாறி. ஏனெனில், அதற்கு அளவும் திசையும் உண்டு.
4. அளவுவரிசை என்றால் என்ன?
ஒரு மாறியின் அளவு அல்லது சிறப்பிற்கேற்பப் பொருள் களை அளப்பதன்மூலம் அப்பொருள் கணத்தை வரிசைப்படுத்தும் முறை. எ-டு. 10 பேரை உயரப்படி வரிசைப்படுத்தல்.
5. வரிசை இணை என்றால் என்ன?
ஒரு குறிப்பிட்ட வரிசையிலுள்ள இரு மாறிகளின் மதிப்புகளைக் காட்டும் இரு எண்கள். எ-டு. இரு பருமக் கார்ட்டீசியன் ஆயங்களிலுள்ள x,y ஆயப்புள்ளிகளில் x,y என்னும் வரிசையுள்ள கணத்தைத் தோற்றுவிப்பது.
6. சுற்றுக்காலச் சார்பு என்றால் என்ன?
மாறியின் ஒழுங்கான இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் வரும் சார்பு. எ-டு. xஇன் காலநிகழ்சார்பு sinx. ஏனெனில், sin x = sin (x + 2π). x இன் எல்லா மதிப்புகளுக்கும் பொருந்துவது.
7. ஏறுபடி என்றால் என்ன?
ஒரு மாறியிலுள்ள சிறிய வேறுபாடு. எ-டு. x மதிப்பிலிருந்து x2 மதிப்புக்கு ஏறுபடி ∆x மூலம் மாறுவது. நுண்கணிதத்தில் முடிவிலாச் சிறு ஏறுபடிகள் பயன்படுபவை.
8. ஒன்றுவிட்ட துண்டு என்றால் என்ன?
ஒன்றுக்கு மற்றொன்று மாறும் துண்டு.
9. மாறுசார்பலன் என்றால் என்ன?
இரண்டிற்கு மேற்பட்ட மாறிகளின் சார்பலன். வேறுபெயர் எதிர்ச்சமச்சீர் சார்பலன். எ-டு. f(x,y,z)=-f(у,х,z).
10. மாறுதொடர் என்றால் என்ன?
உறுப்புகள் மாறிமாறி மிகையாகவும் குறையாகவும் உள்ள வரிசை. எ-டு. Sn=-1+1/2-1/3,+1/4... + (-1)n/n. இது ஒரு குவிதொடர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மாறி மடக்கை திசைச்சாரி - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, மாறி, சமவாய்ப்பு, மாறியின்