கணிதம் :: மாறி மடக்கை திசைச்சாரி
21. மடக்கையைக் கண்டுபிடித்தவர் யார்?
ஜான் நேப்பியர் என்னும் கணிதமேதை.
22. இதில் தீர்வு காணப்பட்டுள்ளவை யாவை?
பெருக்கல், வகுத்தல், கூட்டல், கழித்தல் ஆகியவற்றிற்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
23. மடக்கை வரலாறு யாது?
மிக விரைவாகவும் எளிமையாகவும் கணக்கிடுவதற்குக் கண்டுபிடிக்கப்பட்ட கணக்குச் செயல்முறை. முதன் முதலாக 1614க்கு முன்னர் இதனைக் கண்டுபிடித்தவர் ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்த ஜான் நேப்பியர் (1550-167) என்பவர் ஆவார்.இது நேப்பியர் மடக்கை எனப்பட்டது. இங்கிலாந்தைச் சார்ந்த ஹென்றி பிரிக்ஸ் (1561-1631) இக்கண்டுபிடிப்பைப் பாராட்டியவர். பிரான்ஸ் நாட்டு அறிவியலார் இலாப்லாஸ் கூறியதாவது:
"பல மாதங்கள் கணக்கிடுவதற்கு ஆகும் கணக்குகளைச் சில நாட்களில் செய்து முடிக்க மடக்கை முறை உதவுகிறது" தற்பொழுது நாம் பெரிதும் பயன்படுத்தும் பொது மடக்கை அட்டவணையைத் தயாரித்தவர் பிரிக்ஸ் அவர்களே.
24. மடக்கையின் பண்புகள் யாவை?
1. அடிமானத்திற்கு ஒருமை மடக்கை ≠1 என்பது சுழி
2. அடிமானத்திற்கே உரிய மடக்கை ஒருமை. .
3.எவ்வடிமானத்தின் முடிவிலியின் மடக்கை முடிவிலியே.
4. எவ்வடிமானத்தின் சுழி மடக்கை 0.
25. மடக்கை வகைக்கெழு காணல் என்றால் என்ன?
கொடுக்கப்பட்ட சார்புக் காரணிகளையும் மூலக் குறிகளையும் கொண்டிருக்கும்பொழுது, முதலில் மடக்கை எடுப்பதும் பின் வகைக்கெழு காண்பதும் வழக்கம். இம்முறையே மடக்கை வகைக்கெழு காணல் என்பது.
26. மடக்கைச் சார்பு என்றால் என்ன?
loga x இன் சார்பு. இங்கு a என்பது ஒரு மாறிலி. x, இன் நேரிடை மதிப்புகளுக்கு வரையறை செய்யப்படுவது.
27. மடக்கை அளவுகோல் என்றால் என்ன?
ஒரு கோட்டில் x என்னும் தொலைவு, பார்வைப் புள்ளியிலிருந்து ஒரு எண்ணின் மடக்கைக்கு நேர்வீதத்திலிருக்கும். எ-டு. கோடு நெடுகவுள்ள ஓரலகு நீளம் 10, இரு அலகுகள் 100, மூன்று அலகுகள் 1000.
(3) திசைச்சாரி
28. திசை என்றால் என்ன?
திசைச்சாரி. அளவுகளின் பண்பு. நிலையான தொடக்கப் புள்ளி மற்றும் அச்சுகள் தொடர்பாக வழக்கமாக வரையறுக்கப்படுவது. ஒரு புள்ளியில் வளைகோட்டின் திசை, அப்புள்ளியின் அச்சிலிருந்து தொடுகோடு வரையுள்ள கோணமாகும்.
29. திசைச்சாரி (வெக்டார்) என்றால் என்ன?
திசையையும் அளவையுங் கொண்டது. எ-டு. திசைவிரைவு, முடுக்கம். இதைக் குறிக்கத் திசைக் கோடிட்ட நேர்கோட்டுத் துண்டினைப் பயன்படுத்துகிறோம்.
எ-டு. என்பது A யிலிருந்து B க்கு என்னும் திசையையும் AB என்னும் அளவையும் கொண்ட திசைச்சாரி.
|| என்னும் குறியீடு திசைச்சாரியின் நீளத்தைக் குறிக்கும். இதை அந்தந்த திசைச்சாரியின் எண்ணளவு அல்லது மட்டு என்கிறோம்.
30. வாட்டம் என்றால் என்ன?
குறி ∇. ஒரு திசைச்சாரிச் செயல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மாறி மடக்கை திசைச்சாரி - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - மடக்கை, என்ன, என்றால், என்னும், திசைச்சாரி, என்பது, நேப்பியர், வகைக்கெழு