கணிதம் :: நிகழ்தகவு
31. அடிவரை (fundamental) என்றால் என்ன?
ஒரு பொருள் அதிரும் எளிய வழி. இந்த அதிர்வெண் நிகழ்வெண் அடிவரை நிகழ்வெண் ஆகும்.
32. செவ்வக வரைபடம் என்றால் என்ன?
இதன்மூலம் ஒரு நிகழ்வெண் பட்டியலை விளக்க இயலும். இது உண்மையான பிரிவு இடைவெளிகளின் மீது, அவற்றிற்குரிய நிகழ்வெண்களைக் காட்ட வரையப்படும் பல்வேறு செவ்வகங்களைக் கொண்டது. செவ்வகங்கள் பரப்பு நிகழ்வெண்ணைக் குறிப்பது. ஆனால், பிரிஇடைவெளியின் நீளம் சமமாக இருப்ப தால், செவ்வகங்களின் உயரங்கள் மட்டும் அவை குறிப்பிடும் நிகழ்வெண்களுக்கேற்ற வகையில் மாறுபடும்.
33. வரிசை மாற்றம் என்றால் என்ன?
ஒரு நீள் இருக்கையில் 3 மாணவர்களை எத்தனை வழிகளில் அமர்த்தலாம்? ஒவ்வொரு இருக்கை முறையும் ஒரு வரிசை எனப்படும். மொத்த வரிசை மாற்றங்களின் எண்ணிக்கை 3 = 6. அந்த மாணவர்களுக்கு முதல் நிரை 1,2,3, ஆகவும், இரண்டாம் நிரை மாற்றியமைக்கப்பட்ட வரிசையாகவும் இருக்கும். இவ்வாறு ஆறு வரிசை மாற்றங்களும் பின்வருமாறு எழுதப்படும்.
( 123123 ) ( 123132 ) ( 123231 ) ( 123213 ) ( 123312 ) ( 123321 )
34. சாரா நிகழ்ச்சிகள் என்றால் என்ன?
(A(B)=P(A)PB) என்று இருக்கும்பொழுது மட்டுமே A, B என்னும் இரு நிகழ்ச்சிகள் தனித்தனி நிகழ்ச்சிகளாகும். நடைமுறையில் A,B சாராதவை என்றால், ஒரு நிகழ்ச்சி நடைபெறுவதோ நடைபெறாததோ மற்றொரு நிகழ்ச்சி நடைபெறுவதின் நிகழ்தகவைப் பாதிக்காது என்பது பொருள். சுருக்கமாக, A, B என்னும் நிகழ்ச்சிகள் P(A/B)= P (A) என்று அமையுமானால் A,B என்பவை சாரா நிகழ்ச்சிகள் ஆகும்.
35. நடக்க இயலாத நிகழ்ச்சி என்றால் என்ன?
ஒரு சாதாரண பகடையை வீசும்பொழுது, எண் 7 கிடைப்பதற்கான நிகழ்தகவு சுழியாகும். ஏனெனில், கூறுவெளி (1, 2, 3, 4, 6) இல் 7 ஒரு கூறுபுள்ளி அல்ல. ஆகவே n(E)=0
P(E) = n(E)n(5) = 06 = 0
இத்தகைய நிகழ்ச்சி நடக்க இயலாத நிகழ்ச்சி.
36. மீச்சிறு வர்க்கமுறை என்றால் என்ன?
ஒரு தகவல் தொகுதிக்குத் தொடர்புப் போக்குக் கோட்டைப் பொருந்துமாறு செய்யும் முறை.
37. எதிர்பார்ப்பு மதிப்புகளின் பண்புகள் யாவை?
இவை தனித்த, தொடர் சமவாய்ப்பு மாறிகளுக்கும் பொருந்தும். இங்குத் தொடர் சமவாய்ப்பு மாறிப் பண்புகளைப் பார்ப்போம்.
1. (E aX±b) = aE(X±b).
இங்கு A,B மாறிலிகள்
2. x2= E(x-x)2
38. உறுதியான நிகழ்ச்சி என்றால் என்ன?
ஒரு நாணயத்தை கண்டும்பொழுது, தலை அல்லது பூ கிடைப்பது உறுதியாதலால், அது உறுதியான நிகழ்ச்சி யாகும். இதற்குரிய நிகழ்தகவு 1.
39. வகுப்பு என்றால் என்ன?
நிகழ்வெண் அட்டவணை அல்லது செவ்வக வரைபடத் தில் ஒர் இனமாக எடுத்துக் கொள்ளப்படும் தகவல் தொகுதி.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நிகழ்தகவு - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, நிகழ்ச்சி, நிகழ்ச்சிகள், நிகழ்வெண், வரிசை