கணிதம் :: நிகழ்தகவு
1. நிகழ்தகவு என்றால் என்ன?
ஒரு சிறப்பு நிகழ்ச்சி தோன்றுவதற்குரிய வாய்ப்பு. காட்டாக, ஒரு பகடையை எறியும்பொழுது வருவது A என்றும் இரட்டை எண் ஆனால் பின் P(A)=3/6.
2. நிகழ்தகவு வெளிப்படை உண்மைகள் யாவை?
1. P(A∪B)=P(A)+(PB). இது ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சிக்குரிய நிகழ்தகவின் கூட்டல்விதி.
2. A, B ஒன்றையொன்று விலக்காத நிகழ்ச்சிகளால் P(A∪B) = (PA) + P(B)- P(A∩B).
3. நிகழ்தகவுச் சார்பு என்றால் என்ன?
K என்னும் தனித்த சமவாய்ப்பு மாறி ஏற்கும் மதிப்புகள் x1,x2... என்றால் P(x1) என்பது ஒவ்வொரு x1 க்குரிய தொடர்புடைய எண்ணாக இருக்கட்டும்.
1. P(x1)≥ என்பது i=1,2,3 க்கு.
2. ∑ P(x1) = 1. இவ்விரு நிபந்தனைகளும் நிறைவு செய்யப்பட்டால், P என்னும் சார்பு x இன் நிகழ்தகவுச் சார்பு ஆகும்.
4. ஒரு நிகழ்ச்சியின் நிகழ்தகவு என்றால் என்ன?
பிறக்கும் குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கும். ஆகவே, பெண் குழந்தை பிறப்பதற்கான நிகழ்தகவு = 1/2.
5. பெருக்கற்பலன் என்றால் என்ன?
எண்கள், திசைச்சாரிகள், அணிகள் முதலியவற்றைப் பெருக்குவதால் கிடைக்கும் முடிவு. எ-டு. 4×4= 16. 16 என்பது பெருக்கற்பலன்.
6. நிகழ்தகவுக் கொள்கை என்பது யாது?
ஒரு நிகழ்ச்சி நடைபெறும்பொழுது அதிலுள்ள வாய்ப்புகளைக் கணித முறையில் சீர்தூக்கிப் பார்ப்பது. இதற்கு ஒரு தொகுதியின் சராசரி நிகழ்திறன் தெரிய வேண்டும். எ-டு. வாழ்நாள் காப்பு செய்த ஒருவரின் வாழ்நாள் எவ்வளவு என்பதைக் கணக்கிடல்.
7. நிகழ்தகவுக் கொள்கையின் வரம்பென்ன?
கடும் கணித முன்னறிவிற்கு இக்கொள்கை உதவும். ஒரு தனியாளைப் பொறுத்தவரை அது முழு உறுதியை அளிக்காது.
8. இக்கொள்கையின் வரம்பை தாமஸ் ஹக்கிரி எவ்வாறு விளக்குகிறார்?
குரங்குகள் சிலவற்றிற்குத் தட்டச்சுப் பொறிகளைக் கொடுப்பதாக வைத்துக் கொள்வோம். அதற்குரிய தாளையும் கொடுப்போம். அவை தட்டச்சுப் பொறியை இயக்கினால், பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திலுள்ள எல்லா நூல்களையும் மீண்டும் அச்சிட்டுத் தரும்.
9. இக்கொள்கைப் பயன்பாட்டிற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.
1. அணுக்களின் பரிதியங்களில் மின்னணுக்கள் நடத்தையை முன்கூட்டிக் கூறுதல்.
2. ஒரு புதுவழியில் செல்லும் உந்துவண்டிகளில் எண்ணிக்கையை முன்கூட்டிக் கூறுதல். இதனால் அவை செல்வதற்குரிய நெடுஞ்சாலை அளவு, அதை அமைக்கும் செலவு ஆகியவற்றை மதிப்பிடலாம்.
3. காற்று முதலிய இயற்கை ஆற்றல்களுக்கு உட்படும் பாலங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றில் ஏற்றும் சுமை பற்றிக் கூறலாம்.
4. ஒரு குறிப்பிட்ட பொருளை விற்கும் ஒரு நிலையத்தின் தொழில்நிலையைக் கூற இயலும்.
5. ஒரு நாட்டு குடிமக்கள் சம்பாதிப்புகள் எவ்வளவு என்று கூறலாம். இதிலிருந்து வரிக்குறைப்பு எவ்வளவு செய்ய லாம் என்றும் முடிவு செய்யலாம்.
6. அமைப்புப் பொறிஇயல், செயற்பாட்டுப் பகுப்பு ஆகியவை புதுத்துறைகள். இவை ஒரு தொழிலின் மொத்த நடத்தையை வெளிக்காட்டுபவை. இவை எல்லாம் நிகழ்தகவுக் கொள்கையை நம்பி இருப்பவை.
7. எதிர்காலத் தொழில்நுட்பப் பயன்பாடும் இக்கொள் கையை நம்பி இருப்பதே.
10. சூதாட்டத்திலிருந்து நிகழ்தகவுக் கொள்கை உருவாகக் காரணமாக இருந்தவர்கள் யார்?
17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாஸ்கல், பர்மட்
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நிகழ்தகவு - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், நிகழ்தகவுக், என்ன, நிகழ்தகவு, எவ்வளவு, சார்பு