கணிதம் :: நிகழ்தகவு
21. கணித விளையாட்டுகளின் நன்மைகள் யாவை?
இவை வெறும் பொழுதுபோக்கல்ல. இவற்றிலிருந்து நாகரிகத்திற்குரிய பல அருங்கருவிகள் நமக்குக் கிடைத்துளளன. அவை தொலைபேசி, தொலைக்காட்சி, கணினி, வானவெளிக்கலங்கள் முதலியவை ஆகும். விளையாட்டுகள் போலவே பல புனைவுகள் வெற்றி பெறுகின்றன. ஏனெனில், பொதுமக்கள் நன்மைக்காக வாய்ப்பு இக்கொள்கை மூலம் நன்கு பயன்படுத்தப் படுகிறது.
22. மார்க்கவ் தொடர் என்றால் என்ன?
தனித்த சமவாய்ப்பு நிகழ்ச்சிகள் அல்லது மாறிகளின் தொடர்வரிசை.
23. சமவாய்ப்பு ஆய்வுகள் என்றால் என்ன?
ஒரு நாணயத்தைச் சுண்டும்பொழுது, தலைதான் விழும் பூதான் விழும் என்று கூறமுடியாது. இதுபோன்ற ஆய்வு திரும்பத் திரும்ப ஒரே சூழ்நிலையில் செய்யப்பட்டாலும் விளைவு இதுவாகத்தான் இருக்கும் எனத் திட்டவட்டமாகக் கூற இயலாது.இத்தகைய ஆய்வுகளே சமவாய்ப்பு ஆய்வுகள்.
24. சமவாய்ப்பு அட்டவணை என்றால் என்ன?
0-9 வரை சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்க வரிசையைக் கொண்டுள்ள அட்டவணை. இதில் ஒவ்வொரு இலக்கமும் 1 என்னும் நிகழ்தகவைக் கொண்டது.
25. சமவாய்ப்பு மாறிலி என்றால் என்ன?
முன்கூற்று மதிப்புகளில் ஒன்றைக் கொள்ளும் அளவு.
26. இதன் வகைகள் யாவை?
1. தனித்த சமவாய்ப்பு மாறி
2. தொடர்சமவாய்ப்பு மாறி.
27. கூறு (Sample) என்றால் என்ன?
ஒர் ஆய்வின் இயலக்கூடிய எல்லா விளைவுகளையும் கொண்ட கணமே கூறு.
28. கூறுவெளி (sample Space) என்றால் என்ன?
ஒர் ஆய்வின் இயலக்கூடிய எல்லா விளைவுகளின் தொகுதி. இவ்வெளியின் உறுப்புகள் கூறுபுள்ளிகள் எனப்படும். குறி S.
29. ஒருபடி நிகழ்வரை என்றால் என்ன?
எல்லைக்குட்பட்ட கட்டுப்பாடுகள் அல்லது தடைகளை ஒர் ஒரு படிச்சார்பின் பெருமக்கூறு மதிப்புகளில் காணும் முறை.
30. இந்நிகழ்வரையின் பயன்கள் யாவை?
1. இரண்டிற்கு மேற்பட்ட மாறு அளவுகளின் மிகச்சிறந்த சேர்க்கையைக் காணப் பயன்படுவது. இவ்வளவுகள் மற்றொரு அளவின் மதிப்பை உறுதிசெய்பவை.
2. பெரும் ஆதாயத்தை அளிக்க, ஒரு தொழிற்சாலையிலிருந்து வரும் ஒவ்வொரு பொருளின் அளவுகளின் சிறந்த கூடுதலைக் காண்பதில் பல மாறிகளும் தடைகளும் உள்ளன.
3. மாறிகளையும் தடைகளையும் அதிகம் கொண்ட ஒருபடிச் சார்புகள் கணிப்பொறி நுணுக்கங்களால் பெரும அல்லது சிறுமப் படுத்தப்படுகின்றன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நிகழ்தகவு - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - சமவாய்ப்பு, என்ன, என்றால், அல்லது, யாவை