கணிதம் :: நிகழ்தகவு
11. நிகழ்தகவுக் கொள்கைக்கு மூன்று வெளிப்படை உண்மைகளை அளித்தவர் யார்?
உருசிய கணித மேதை கால்மோசிரோவ்.
12. நிகழ்ச்சி என்றால் என்ன?
1. ஒரு பகடையை வீசும்பொழுது, ஒற்றைப்படை எண் கிடைப்பது நிகழ்ச்சியாகும். 1,3,5 என்னும் எண்களில் ஏதேனும் கிடைத்தால் நிகழ்ச்சி நடைபெறுகிறது என்று பொருள்.
2. கூறுவெளியின் உட்கணமே நிகழ்ச்சி. வெற்றுக்கணம் நடக்க இயலாத நிகழ்ச்சி. S என்பது நடக்கக்கூடிய நிகழ்ச்சி.
13. நிகழ்வெண் வரைபடங்கள் என்றால் என்ன?
வேறுபட்ட இடங்களுக்கும் வேறுபட்ட காலங்களுக்கு முரிய தகவல்களை விரைவாகவும் துல்லியமாகவும் ஒப்பிட இவை பெரிதும் உதவுபவை.
14. நிகழ்வெண் அட்டவணை என்றால் என்ன?
ஒரு மாதிரியில் முடிவின் ஒவ்வொரு வகையும் எவ்வாறு தோன்றுகிறது என்பதைக் காட்டும் பட்டியல், எ-டு. ஒரு நிறுவனத்தில் 100 தொழிலாளர்கள் பெறும் வாரச் சம்பளம் ஒவ்வொரு வீச்சிலும் எண்ணாகக் காட்டப் படுவது.
15. தகவல் கொள்கை என்றால் என்ன?
நிகழ்தகவுக் கொள்கையின் பிரிவு. உறுதியின்மை, துல்லியம், செய்திச் செலுத்துகையின் செய்தியடக்கம் முதலியவற்றை ஆராய்வது.
16. கணித எதிர்பார்ப்பு என்றால் என்ன?
நிகழ்தகவுப் பரவலின் சராசரியை எதிர்பார்ப்பு அல்லது சமவாய்ப்பு மாறியின் எதிர்பார்ப்பு மதிப்பு எனக் கூறலாம்.
17. விளையாட்டுக் கொள்கை என்றால் என்ன?
விளையாட்டுகளில் ஒவ்வொரு விளைபயனின் நிகழ்தகவுகளின் கணித ஆய்வு. யார் வெற்றி பெறுவார் என்பதில் வாய்ப்புக்கூறு இருப்பினும், குறிப்பிட்ட விளைபயன் வாய்ப்புகளைப் பெருமமாக்கப் பொதுவிதிகள் உள்ளன. புள்ளிவிவர நுணுக்கங்களைப் பயன்படுத்தி, விளையாட்டாளர் எண்ணிக்கை, விளையாட்டு விதிகள் ஆகியவற் றிலிருந்து இவற்றைக் கணக்கிட இயலும்.
18. கணிதத்திற்கும் விளையாட்டிற்குமுள்ள தொடர்பென்ன?
நிகழ்தகவுக் கொள்கை வழியாக இத்தொடர்பு ஏற்படுகிறது.
19. இத்தொடர்பை ஆராய்ந்து கூறியவர் யார்?
டாக்டர் ஜான்வான் நியூமன். அமெரிக்கப் பிரின்ஸ்டன் உயராய்வு நிறுவனத்தில் பணியாற்றி இயற்கை எய்தியவர் இவர்.
20. இவர் ஆய்வுகள் பற்றிக் கூறுக.
இவர் பல ஆண்டுகள் உழைத்து விளையாட்டைக் கணித வாய்பாடுகளாக மாற்றினார். இவ்வாய்பாடுகள் தெரி விப்பவை: வெற்றி பெறும் நிகழ்தகவுகளைத் துல்லிய மானதும் சிக்கலானதுமான உறுப்புகளில் கூறலாம். முழு விளையாட்டுத் தொழிலும் காப்பு அடிப்படையில் அமைவதே. ஒரு விளையாட்டாளர் பெருமளவுக்கு வெற்றி பெறலாம். அதை நன்கு பயன்படுத்தவும் செய்யலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நிகழ்தகவு - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, நிகழ்ச்சி, கணித, வெற்றி, இவர், எதிர்பார்ப்பு, ஒவ்வொரு, யார், நிகழ்தகவுக், கொள்கை