கணிதம் :: இந்தியக் கணித மேதைகள்
31. சுப்பையா சிவசங்கர நாராயண பிள்ளை என்பவர் யார்?
இராமானுஜன் போன்று சிறந்த கணித மேதை. எண்களில் ஆராய்ச்சி செய்தவர்.
32. அவர் பங்களிப்பின் சிறப்பு யாது?
மேல் நாடுகளில் 300 ஆண்டுகளாக யாராலும் தீர்க்க முடியாத ஒரு சிக்கலான கணக்கை எளிதில் தீர்த்து வைத்தவர். இவர்தம் அறிவுத் திறமையைக் கேள்வியுற்ற ஐன்ஸ்டீன் விமானப் பயணச் சீட்டை அனுப்பித் தம் நாட்டுக்கு வருமாறு அழைத்தார். இவரும் அழைப்பை ஏற்றுக் கொண்டு புறப்பட்டார். ஆனால், தீவினைப் பயனாக விமானம் சகாரா பாலைவனத்தின் வழியே சென்றபொழுது, விழுந்து நொறுங்கியது. இவரும் உயிரிழந்தார் (1901-1950). திருநெல்வேலிச் சீமையைச் சார்ந்தவர்.
33. 361 ஆண்டு பழமையுள்ள கணிதப் புதிர் யாது? இதற்குத் தீர்வு கூறியவர் யார்?
361 ஆண்டு பழமையுள்ள கணிதப் புதிர் பெர்மட் கடைசித் தேற்றமாகும் (Femet's Lasttheorem, FLT). இதற்கு நாக்பூர் பல்கலைக் கழகப் பேராசிரியரும் துறைத் தலைவருமான வி.கே.குர்து தீர்வளித்துள்ளார். இந்தியக் கணிதக் கழக 64ஆவது ஆண்டு மாநாடு 1999 ஜனவரி 4இல் ஹரிதுவாரில் நடைபெற்றது. இதை இவர் மாநாட்டில் அளித்தார். இவருக்கு முன் இத்தேற்றத் திற்குத் தீர்வளித்தவர் (1995) பிரின்ஸ்டன் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஆண்ட்ரு வைல்ஸ். இவர் தரும் தீர்வு 109 பக்கம் உள்ளது. புரிந்து கொள்ளக் கடினமானது. பேராசிரியர் குர்துவின் தீர்வு சுருக்கமும் எளிமையும் கொண்டது. ஆகவே, புரிந்து கொள்வதற்கு ஏற்றது.
34. பேராசிரியர் கிருஷ்ணசாமி அலாடியின் பங்களிப்பு என்ன?
1. சென்னையில் கணித அறிவியல் அமைப்பை நிறுவியவர். அதன் இயக்குநராக இருந்தவர்.
2. இவர் கருத்துப்படி ஆக்க நிலைக்கணிதம் 21ஆம்
நூற்றாண்டிலிருந்து தொடங்கும். .
3. பிரித்தல் கொள்கைக்கு மெய்ப்பு உருவாக்கியவர். இதற்குப் பேரா. ஜார்ஜ் ஆண்ட்ரூஸ், பேரா.அலெக்சாண்டர் பெர்கோவிச் ஆகிய இருவரும் உதவினர்.
4. அல்லாடி நூற்றாண்டு நிறுவனத்தைக் கணிதக் கருத்துகளை மாணவர்களிடையே பரப்ப நன்கு பயன்படுத்தி வருகிறார்.
5. இவர் தாம் கணிதத்திற்கு ஆற்றிய தொண்டைத் தம் அல்லடி நாட்குறிப்பு என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இது 24 -12-99 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்தியக் கணித மேதைகள் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - இவர், பேராசிரியர், தீர்வு, ஆண்டு