கணிதம் :: இந்தியக் கணித மேதைகள்
21. அவர்தம் இரு சிறந்த கண்டுபிடிப்புகள் யாவை?
1. புகழ்பெற்ற ஸ்விஸ் கணக்கறிஞரின் கணக்கு உய்மானம் தவறு என மெய்ப்பித்தவர்.
2. தொலை தொடர்புத் துறைக்குப் புதிய குறிமுறை களை உருவாக்கினார். இவை போஸ்-ரே செளத்திரி குறிமுறைகள் எனப் பெயர் பெறும்.
22. காப்ரேகர் மாறிலி (Kaprekar Constant) என்றால் என்ன?
இந்தியக் கணித அறிஞர் டி.ஆர். காப்ரேகர் பெயரால் அமைந்தது (1905-1988). இதை இவர் 1946 இல் கண்டு பிடித்தார். இது 6174 என்னும் எண் பற்றியது. பொழுது போக்கு கணக்குகளிலும் வல்லவர்.
23. கார்மார்க்கர் செய்முறைப்பாடு எப்பொழுது உருவாகியது?
1984இல் கார்மார்க்கர் உருவாக்கினார். உலகப் புகழ் பெற்றது.
24. இதன் சிறப்பென்ன?
இதற்கு முன்னுள்ள செய்முறைப்பாட்டை விட 50-100 தடவைகள் விரைவானது. அவற்றைவிடப் பணிகளைத் திறம்படச் செய்வது.
25. ஜி.ஆர். ராவ் என்பவர் யார்?
கர்நாடகத்தைச் சேர்ந்தவர். சிறந்த புள்ளியியல் அறிஞர் (1920- ).
26. அவர் வெளியிட்ட உலகத்தை ஈர்த்த கொள்கை யாது?
மதிப்பிடல் கொள்கை (Theory of estimation), 1949.
27. அவர் புகழ் பெற்ற தேற்றங்கள் யாவை?
கிரேமர் - ராவ் சமமின்மை, பிஷர் - ராவ் தேற்றம், ராவ் - பிளாக்வெல்லிசேஷன்.
28. புள்ளியியலை அவர் எத்துறைகளில் பயன்படுத்தினார்?
மருத்துவம், தாவரப்பெருக்கம், உயிர் அளவை, மாந்த வியல், மரபியல்.
29. ஹேரிஷ் சந்திரா யார்? அவர் பங்களிப்பென்ன?
இந்தியாவில் பிறந்த சிறந்த கணிதமேதை. உத்திர பிரதேசத்தைச் சார்ந்தவர் இவர். 1922இல் முடிவிலிப் பருமத் தொகுதி குறிக்கொள்கையை (infinite dimensional group theory) உருவாக்கியவர்.
30. இக்கொள்கையின் சிறப்பு யாது?
இக்கொள்கை 1930களில் இக்கால இயற்பியலில் தோன்றியது. இவர்தம் அயரா உழைப்பால் இக் கொள்கை தற்பொழுது கணிதத்தின் எல்லாத் துறைகளிலும் பயன்படுகிறது. இத்துறைகள் வடிவ கணிதத்திலிருந்து எண்ணியல் கொள்கை வரை விரிந்து செல்பவை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்தியக் கணித மேதைகள் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - கொள்கை, அவர், ராவ், சிறந்த