கணிதம் :: இந்தியக் கணித மேதைகள்
1. எண்களை எண்ணும் முறை பழங்காலத்தில் எது வரை இருந்தது?
இந்தியர்கள் 1012 வரையிலும் கிரேக்கர்கள் 104 வரையிலும் உரோமானியர்கள் 108 வரையிலும் எண்ணினர்.
2. திருவள்ளுவர் ஆண்டு முறையை விளக்குக.
தை முதல் மார்ச் வரையுள்ள காலம் திருவள்ளுவர் ஆண்டு.இது கிறித்துவ ஆண்டைவிட 31 ஆண்டுகள் முந்தியது. எ-டு. கி.பி. 2002 + 31 = 2033 திருவள்ளுவர் ஆண்டு.
3. நாள்மிகையாண்டு என்றால் என்ன?
லீப் ஆண்டு. நான்காண்டிற்கு ஒரு முறை பிப்ரவரியில் 29 நாட்கள் கொண்ட ஆண்டு. மெரார்ஜி தேசாய் பிப்ரவரி 29 இல் பிறந்தவர். ஆகவே, அவருக்குப் பிறந்த நாள் நான்காண்டிற்கு ஒரு முறை வந்தது.
4. சுலுப சூத்திரங்கள் என்பவை யாவை?
இவை இந்தியர்கள் கண்டறிந்தவை. பித்தகோரஸ் தேற்றத்தோடு ஒப்பிடத்தக்கவை.
5. இந்தியர்கள் அறிந்திருந்த வீதமுறா எண்கள் யாவை?
√2, √3. இவற்றின் மதிப்புகளை உயர் தோராய அளவுக்கு அறிந்திருந்தனர்.
6. சுழி என்னும் கருத்து எப்பொழுது இந்தியர்களால் கண்டு பிடிக்கப்பட்டது?
கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் வேறு பெயர்கள் பூஜ்ஜியம், சூன்யம், பிண்டு. இவர்கள் முழு எண்களில் சுழியைச் சேர்த்ததினால், குறை எண்கள் என்னும் புதிய எண்கள் தோன்றின. முழுமை பெற்ற எண்களை அவர்கள் அளப்பதற்குப் பயன்படுத்தினர்.
7. கணிதசார சாங்கிரம் என்னும் நூலை எழுதியவர் யார்?
மகாவீரர்.
8. தமிழில் கணக்குப் பற்றியுள்ள செய்யுள் எது?
கணக்கதிகாரம்.
9. இந்தியர் முதன்முதலாகக் கண்டறிந்தது யாது?
தொகுதி எண்களை மேலாகவும் பகுதி எண்களைக் கீழாகவும் எழுதும் முறையை இந்தியர் கண்டறிந்தனர். ஏழில் ஐந்து என்பதை 5/7 என்று எழுதினர்.
10. தொகுதி பகுதிக்கு அடிக்கோடு போட்டவர் யார்?
அரேபியர் 57 என்பதை 57 என்று குறித்தனர்
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்தியக் கணித மேதைகள் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - ஆண்டு, எண்கள், என்னும், திருவள்ளுவர், வரையிலும், முறை, இந்தியர்கள், எண்களை