கணிதம் :: அயல்நாட்டுக் கணித மேதைகள்

31. ஜெர்மன் கணிதமேதை ஜார்ஜ் கேண்டரின் அரும்பணி யாது?
கனங்களைப் பற்றி முதலில் அறிமுகப்படுத்தியவர் இவரே (1845-1918). குலங்களின் இயல்புகளையும் அவற்றிற்குள்ள தொடர்புகளையும் கணங்களைக் கொண்டு அறிய இயலும் என்று மெய்ப்பித்தார். தவிரப் பல் வகைப்பட்ட மாறிகளைக் கொண்டு சமன்பாடுகளைத் தீர்க்கும் இயற்கணித முறைகளையும் எண்களின் அமைப்புகளையும் இவர் அறிமுகப்படுத்தினர்ர். வடிவியலில் நேர்க்கோடு, வளைகோடு ஆகியவற்றிலுள்ள புள்ளிகள் பற்றியும் முடிவிலாக் கணங்கள் பற்றிய தொடர்புகளையும் இவர் விளக்கியுள்ளார்.
32.சமச்சீர் (symmetry) என்றால் என்ன?
ஆடி பிம்பமே சமச்சீராகும். இது ஒளிபிரதிபலித்தலால் ஏற்படுவது. ஒரு பொருளின் உரு அதே அளவுக்குத் தெரியும். -
33. இதைத் தற்கால இயற்பியலில் வற்புறுத்திய கணக்கு மேதை யார்?
அமலி எம்மி நோதர் அம்மையார் (1882 - 1935)
34. இவர் வற்புறுத்தும் கருத்துகள் யாவை?
இயற்கைச் சமச்சீரும் ஆற்றல் மாறாவிதிகளும் கை கோத்துச் செல்பவை. இவற்றில் ஒன்றை எங்கே பார்த்தாலும் மற்றொன்றையும் அங்கே பார்க்கலாம்.
35. இவர் பங்களிப்பின் சிறப்பென்ன?
1. சமச்சீர் பற்றிய இவர் பங்களிப்பு இக்கால இயற்பியலின் அடிப்படைகளில் ஒன்று.
2. தம் சார்புக்கொள்கையை வகுக்க இது ஐன்ஸ்டீனுக்கு உதவியது. மற்ற இயற்பியலாருக்கும் உதவியது.
36. சர் ரோஜர் பென்ரோசின் பங்களிப்பு என்ன?
இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகக் கணிதப் பேராசிரியர் மூன்று துறைகளில் இவர் பங்களிப்பு:சிறப்புள்ளது.
1. இயற்கணித வடிவியல் அறிஞர் இவர். ஆகவே, துணைச்சமச்சீரை (quasi symmetry) நன்கு ஆராய்ந்துள்ளார்.
2. பொதுச்சார்புக் கொள்கையும் சிப்பவிசை இயலையும் இணைத்துள்ளார்.
3. மனித உள்ளத்தை ஆராய்ந்து செயற்கை நுண்ணறிவை (கணினி) உருவாக்கலாம்.
37. பால் எர்டாஸ் என்பவர் யார்?
20ஆம் நூற்றாண்டின் சிறந்த கணிதமேதை (1913-1996). இவர் அல்லாடி ராமகிருஷ்ணனின் ஆசான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அயல்நாட்டுக் கணித மேதைகள் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - இவர், பங்களிப்பு