கணிதம் :: அயல்நாட்டுக் கணித மேதைகள்
21. ஜார்ஜ் கேண்டர் என்பார் யார்?
18ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த ஜெர்மன் கணிதஅறிஞர். கணம் என்னும் கருத்தை முதன்முதலில் கையாண்டவர். அதாவது கணக்கொள்கையை நிறுவியவர்.
22. போரியர் தேற்ற வரலாறு யாது?
போரியர் என்பார் கணக்கில் ஆர்வமுள்ளவர். இயற்பியலில் அதைப் பயன்படுத்த விரும்பியவர். இவர் வெப்பத்தின் பகுப்புக்கொள்கை என்று ஓர் ஆராய்ச் சியை 1822இல் வெளியிட்டார்.இதில் கணிதப்பகுப்பிற்கு ஒரு புதுமுறையை அளித்தார். அறிவியல் சமன்பாடு நிலையான அலகுத் தொகுதியைக் கொண்டிருக்க வேண்டும் என்று முதன்முதலில் கூறியவர். இக்கருத்தே போரியர் தேற்றம் எனப்பட்டது.இத்தேற்றத்தை 1823இல் வெப்பத்தின் பகுப்புக் கொள்கை என்னும் தம் நூலில் விளக்கினார். பிரான்சைச் சார்ந்தவர்.
23. இராபர்ட் ஆர்கண்ட் என்பாரின் பங்களிப்பு யாது?
இவர் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கணிதமேதை. 1806 இல் சிக்கல் எண்கள் வரைபட அமைப்பை, வெளியிட்டவர்.
24. சிக்கல் எண்களை நன்கு ஆராய்ந்தவர்கள் யார்?
காரில் பிரெட்ஸ் காஸ், வில்லியம் ரோவர் ஆமில்டன்.
25. திசைச்சாரி கருத்துகளை வளர்த்தவர்கள் யார்?
19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெர்மன் கணிதமேதை கிராஸ்மன், அயர்லாந்து. கணிதமேதை ஆமில்டன்.
26. காலோய் என்பார் யார்?
இவர் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரஞ்சு கணிதமேதை. தொழில்நுணுக்கப் பொருளில் குலம் என்னும் சொல்லை முதன்முதலில் இவர் பல்லுறுப்புக் கோவைகளின் தீர்வு மாற்றங்களின் வரிசைமாற்றங்களை ஆராயும் நிலையில் பயன்படுத்தியவர்.
27. குரோனக்கர் என்பார் யார்?
19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெர்மன் கணிதமேதை. இவர் கூற்று: "முழு எண்களைக் கடவுள் உருவாக்கினார். மீதி யாவும் மனிதன் செயல்பாடுகளே!".
28. கார்ல் பிரடரிக் காஸ் என்பவர் யார்?
19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இயல்நிலைப்பரவல் இவர் பெயரால் காஸ் பரவல் என்று கூறப்பெறுவது. ஒரே அளவின் மீள் அளவீட்டினால் ஏற்படும் பிழைகளை ஆராய்ந்து அதிலிருந்து இதற்குரிய சமன்பாட்டை வருவித்தார்.
29. இலாப்லாஸ் என்பார் யார்?
19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கணிதமேதை. இயல்நிலை வளைவரையின் கணிதச் சமன்பாட்டை மீண்டும் கண்டறிந்து இயற்கை அறிவியல், சமூக அறிவியல் இரண்டிலும் அதைப் பயன்படுத்தியவர்.
30. ஜார்ஜ் பூல் என்பார் யார்?
19ஆம் நூற்றாண்டின் (1815-1864) கணிதமேதை. இவர் பெயரில் அமைந்த இயற்கணிதம் கணிப்பொறியின் உயிர்நாடி
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அயல்நாட்டுக் கணித மேதைகள் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - யார், கணிதமேதை, இவர், 19ஆம், என்பார், நூற்றாண்டில், வாழ்ந்த, காஸ், போரியர், ஜெர்மன், என்னும், முதன்முதலில், அறிவியல்