கணிதம் :: அயல்நாட்டுக் கணித மேதைகள்
1. ஆர்க்கிமெடிசின் சிறப்பென்ன?
இவர் கிரேக்கக் கணிதமேதை, பொறியாளர். ஆர்க்கிமெடிஸ் விதி புகழ் பெற்ற விதி.
2. முக்கோணவியல் தந்தை யார்?
கி.மு. 2இல் வாழ்ந்த இப்பார்கஸ் என்னும் கிரேக்க வானியலார்.
3. கி.மு. 5-6ஆம நூற்றாண்டுகளில் கணித வளர்ச்சி எப்படி இருந்தது?
பித்தகோரசும் அவர்தம் சீடர்களும் எண்கணிதத்தையும் வடிவ கணிதத்தையும் வளர்த்தனர். சீனர்கள் கணிதத்தில் முன்னேற்றங்களை அறிமுகப்படுத்தினர். இந்தியர்களும் வடிவ கணக்கை வளர்த்தனர்.
4. இரோடோஸ்தனிசின் சிறப்பு யாது?
இவர் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க கணித அறிஞர். 101க்குக் குறைவான எல்லாப் பகா எண்களையும் கண்டுபிடிக்க எளிய முறை ஒன்றை இவர் கூறினார். இதற்கு இரோடோஸ்தஸ் சல்லடை என்று பெயர்.
5. ருங்கிகுட்டா முறை என்றால் என்ன?
பொதுவான வகைக்கெழுச் சமன்பாடுகளைத் தீர்க்கக் கணிப்பொறிப் பகுப்பில் பயன்படும் வழிமுறை நுணுக்கம்.
6. கூட்டல், கழித்தல் செயல்களுக்குரிய குறிகளைப் பயன் படுத்தியவர் யார்?
15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜோஷான் லிட்மேன் என்னும் ஜெர்மன் கணித அறிஞர். கூட்டல் + கழித்தல் -.
7. பெருக்கல் குறிக்கு வித்திட்டவர் யார்?
17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வில்லியம் ஒட்ரேட் குறி ×
8. வகுத்தல் குறிக்கு வித்திட்டவர் யார்?
17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்விஸ் கணித அறிஞர் ரிட்ச்ரான் ஜோஷான் ஷென். குறி. ÷.
9. தொகுதி எண் பகுதி எண் ஆகியவற்றிற்கிடையே குறியிட்டு எழுதியவர் யார்?
இலய்பினிட்ஸ் என்னும் ஜெர்மன் கணிதமேதை. 5/7 என்பதை 5:7 என்று எழுதினார்.
10. இலய்பினிட்ஸ் என்பவர் யார்?
17ஆம் நூற்றாண்டு இறுதியில் வாழ்ந்த ஜெர்மன் கணித அறிஞர். இவர் முதன்முதலில் வகைக்கெழுச்சமன்பாடு என்னும் சொல்லைப் பயன்படுத்தினார். x,y என்னும் மாறிகளின் வகைக்கெழுக்களான dx, dy ஆகிய இரண்டிற்குமிடையே உள்ள உறவைக் குறிக்க இதைப் பயன்படுத்தினார்.
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அயல்நாட்டுக் கணித மேதைகள் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - வாழ்ந்த, யார், கணித, என்னும், அறிஞர், நூற்றாண்டில், இவர், ஜெர்மன்