கணிதம் :: அயல்நாட்டுக் கணித மேதைகள்
11. டேகார்ட் முன்மொழிந்த கொள்கை யாது? இதைப் பயன் படுத்தியவர் யார்?
பருமன்கள் பற்றிய கொள்கையை டேகார்ட் முன்மொழிந்தார். இவர் பிரஞ்சு அறிவியலார். 17ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர். இக்கொள்கையைப் போரியர் பயன்படுத்தினார்.
12. பாஸ்கலின் சிறப்பென்ன?
இவர் பிரஞ்சு கணக்கறிஞர், மெய்யறிவாளர். கணக்கிடும் எந்திரம் ஒன்றைப் புனைந்தார். பாஸ்கல் விதி யாவரும் அறிந்த விதி.
13. பாஸ்கல், பெர்மட் ஆகிய இருவரின் சிறந்த பங்களிப்பு என்ன?
நிகழ்தகவுக் கொள்கையை இவர்கள் நிறுவினர், 1654.
14. ஜி.ஜே. வான் லாச்செனின் பங்களிப்பு என்ன?
இவர் ஜெர்மன் கணக்குமேதை. முக்கோணவியல் அட்டவணைகளைத் திருத்தியமைத்தார்.
15. சைமன் ஸ்டீவின் என்பாரின் பங்களிப்பு என்ன?
இவர் டச்சு கணக்கறிஞர். இவர் ஆய்வுகள் நீர்நிலையியல் உருவாக வழிவகுத்தன.
16. நுண்கணிதத்தைத் தனித்தனியே உருவாக்கியவர்கள் யார்?
நியூட்டனும், இலய்பினிட்ஸ் நுண்கணிதத்தை உரு வாக்கினர், 1669.
17. நியூட்டனின் அரும்பணியாது?
வடிவியல், விசைஇயல் ஆகிய துறைச் சிக்கல்களிலிருந்து எழுந்த சில எளியவகைக் கெழுச்சமன்பாடுகளுக்கு இவர் 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பர்னவுலி போன்று தீர்வு கண்டார்.
18. கோல்டுபாச் உய்மானம் என்றால் என்ன?
18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கணிதமேதை, ஒவ்வொரு ஒற்றை எண்ணும் இரு பகா எண்களின் கூட்டுத்தொகை என்னும் உய்மானம். இதுவரை இது மெய்ப்பிக்கப்படவில்லை. எ-டு. 2+2= 4, 6=3+3, 8=3+5.
19. டிமாவர் என்பவர் யார்?
ஆங்கிலக் கணிதமேதை. 1733 இல் இயல்நிலை வளைவரையின் கணிதச் சமன்பாட்டை இவர் கண்டறிந்தார்.
20. வாண்டர் மாண்டே என்பவர் யார்?
1771இல் இவர் முதன்முதலில் அணிக்கோவையை முறையாக விளக்கினார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அயல்நாட்டுக் கணித மேதைகள் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - இவர், யார், என்ன, பங்களிப்பு