கணிதம் :: கோவையும் சமன்பாடும்

41. கார்ட்டீசியன் பெருக்கற்பலன் என்றால் என்ன?
A இன் உறுப்புகளை முன்னுறுப்புகளாகவும் B இன் உறுப்புகளைப் பின்னுறுப்புகளாகவும் கொண்டு அமையும் கணம் A,B இவற்றின் பெருக்கல் கணம்.
42. இலாப்லாஸ் சமன்பாட்டின் பயன் யாது?
புவிஈர்ப்பு, காந்தப்புல ஆய்வில் பயன்படுவது.
43. பர்னவுலி சமன்பாட்டைக் கூறு.
இது ஒரு வகையீட்டுச் சமன்பாடு. இதன் வடிவம்.
dydx + py = y2. இங்கு p,q x இன் சார்புகள்.
44. பர்னவுலியின் பங்களிப்பு என்ன?
வடிவியல், விசைஇயல் ஆகிய துறைச் சிக்கல்களால் எழுந்த சில எளிய வகைக்கெழுச்சமன்பாடுகளுக்கு இவர் 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (1654-1703) நியூட்டன் போன்று தீர்வு கண்டவர்.
45. அலைச்சமன்பாடு என்றால் என்ன?
இரண்டாம் வரிசைப் பகுதி வகைகெழுச் சமன்பாடு. அலை இயக்கத்தை விளக்குவது.
சமன்பாடு ∂2 ∪ ∂ x2 = (1/c2) ∂2 ∪ ∂ t2
46. சாராமாறிச் சமன்பாடுகள் யாவை?
ஒர் உட்கிடையான சார்பில் f (x, y) = 0, ஓர் அளவுச் சார்பாக x, y ஆகிய இரண்டையும் தனித்தனியே தெரிவிக்கும் சமன்பாடுகள். இவ்வளவு ஒரு தனி மாறி அல்லது சாரா மாறி எடு ஒரு வட்டச்சமன்பாடு பின்வரும் வடிவத்தில் எழுதப்படலாம்.
x2 + y2 = r2 அல்லது சாராமாறிச் சமன்பாடுகள்.
x = r cos θ
y= r sin θ
47. வகைக்கெழு என்றால் என்ன?
வழிச்சார்பு ஆகும்.
48. திசை வகைக்கெழு என்றால் என்ன?
குறித்த ஒரு வளைகோடு நெடுகவோ குறிப்பிட்ட திசையிலோ S என்னும் தொலைவுச் சார்பாக ஒரு சார்பின் மாற்ற அளவு.
49. ஈருறுப்புக் கெழு என்றால் என்ன?
ஓர் ஈருறுப்பு விரிவின் உறுப்பில் மாறிகளைப் பெருக்கும் காரணி, எ-டு. (x + y)2 = x2 + 2xy + y2 என்பதில் ஈருறுப்புக் கெழுக்கள் முறையே 1, 2, 1.
50. டி செயலி என்றால் என்ன?
வகைக்கெழுச் செயலி d/dx. எண் மதிப்பு இல்லாவிட்டாலும் ஒரு பொது இயற்கணித அளவு போலவே D செயலி கருதப்படும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோவையும் சமன்பாடும் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, செயலி, சமன்பாடு, சமன்பாடுகள்