கணிதம் :: கோவையும் சமன்பாடும்
1. கோவை என்றால் என்ன?
குறியீடுகளின் சேர்க்கை. கணித முழுமைகள், செயல்கள், எண்கள் ஆகியனவற்றைக் குறிப்பது.
எ.டு. 5×2-6x+3.
2. கோவையின் வகைகள் யாவை?
1. ஒருறுப்புக் கோவை - ஒரே உறுப்பை மட்டும் கொண்டது. எ-டு. 36a2.
2.ஈருறுப்புக் கோவை இரு உறுப்பு எனக் கொண்டது. எ-டு. . a2×2a.
3. மூவுறுப்புக்கோவை - மூன்று உறுப்புகளைக் கொண்டது. எ-டு. (3xy+7)3.
4. பல்லுறுப்புக் கோவை - பல உறுப்புகளைக் கொண்டது. 5x2-6x= 3,
3. ஈருறுப்புக் கோவை என்றால் என்ன?
இயற்கணிதக் கோவை. இதில் இருமாறிகள் இருக்கும். எ-டு. 2x+y, 4a+b = 0. ஆகிய இரண்டும் ஈருறுப்புக் கோவைகள்.
4. ஈருறுப்புச் சமவாய்ப்பு மாறி என்றால் என்ன?
ஒவ்வொரு செயலுக்கும் p ஐ வெற்றிக்கான நிகழ்தகவாகக் கொண்ட பை சாராப் பர்னவுலி முயற்சிகளில் கிடைக்கும் வெற்றிகளின் எண்ணிக்கை X என்றால் அதை p ஐப் பண்பளவாகக் கொண்ட ஈருறுப்புச் சமவாய்ப்பு மாறி என்கிறோம்.
5. மாறிகளைப் பிரிக்க இயலுமா?
இயலும்.
6. ஈருறுப்பு விரிவு என்றால் என்ன?
(x+y)n என்னும் கோவையின் விரிவிற்குரிய விதி. xy என்பவை மெய்யெண்களாக இருக்கலாம். n முழு ஆகும்.
7. ஈருறுப்பு ஆய்வு என்றால் என்ன?
ஒன்றுக்கு மேற்பட்ட பெர்னவுலி முயற்சிகளைக் கொண்டது.
8. இதன் பண்புகள் யாவை?
1. குறிப்பிட்ட விதிக்குட்பட்டதும் தீர்மானிக்கப் பெற்றதுமான எண்ணிக்கையுள்ள செயல்களை இது பெற்றிருக்கும்.
2. ஒவ்வொரு செயலுக்கும் வெற்றிக்குரிய நிகழ்தகவு சமமாக இருக்கும்.
3. செயல்கள் ஒன்றுக்கு மற்றொன்று சாராச் செயலாக இருக்கும்.
9. ஈருறுப்புத் தொடரின் பண்புகள் யாவை?
1. X இன் அடுக்குகளின் குறிகள் ஒன்று ஒன்றாக அதிகமாகும். எந்த ஒர் உறுப்பிலும் X இன் அடுக்கு அதன் குணகங்களின் காரணிகளுக்குச் சமம். எ-டு. X3 இன் குணகத்தில் தொகுதியில் 3 காரணிகளும் பகுதியில் 3! உம் வருகின்றன.
2. முதலுறுப்பு 1, எல்லா உறுப்புகளிலும், அதற்கு முன்னால் வரும் உறுப்புகளைவிட ஒரு காரணி கூடுதலாக இருக்கும்.
3 தொகுதியிலுள்ள காரணிகள் ஒரு A.P இல் உள்ளன. அதன் முதல் உறுப்பு n, C - D = 1. அல்லது -1, C - Dn1 எனில், ஈருறுப்புச் சேர்க்கையின்படி n, C-D = 1 எனில் அதன்படி n ஆகும்.
10. மூவுறுப்புக் கோவை என்றால் என்ன?
தன்னுள் மூன்று மாறிகளைக் கொண்ட இயற்கணிதக் கோவை. எ-டு. 2x+2y+z.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோவையும் சமன்பாடும் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - கோவை, என்றால், என்ன, கொண்டது, இருக்கும், கொண்ட, ஈருறுப்புச், யாவை, ஈருறுப்புக்