புவியியல் :: கடல் ஆராய்ச்சி
1. கடலை ஆராய மேற்கொள்ளப்பட்ட மூன்று அனைத்துலகத் திட்டங்கள் யாவை?
1. ஐஜிஒய் - அனைத்துலக இயற்பியல் ஆண்டு.
2. ஐஐஒஇ - அனைத்துலக இந்தியக் கடல் பயணம்.
3. கூஸ் - உலகக் கடல் உற்றுநோக்கு அமைப்பு.
2. கடற்கரை மேலாண்மை என்றால் என்ன?
இதன் முழுப் பெயர் ஒருங்கிணைந்த கடல் மண்டல மேலாண்மை என்பது. இதன் திட்டங்கள் மூன்று இடங்களில் செயற்படுகின்றன. அவற்றில் ஒன்று சென்னை. இதன் முதன்மையான நோக்கம் கடற் பகுதிகளைக் காப்பதும் பொருளியல் செயல்களை ஊக்குவிப்பதும் ஆகும். மைய அரசு சார்ந்தது.
3. கடல்துறையில் இந்தியாவின் அருஞ்செயல்கள் யாவை?
1. கடல் வளர்ச்சித் துறை நிறுவியுள்ளது.
2. கடற்கரை மேலாண்மை அமைத்துள்ளது.
3. தேசியக் கடல் தகவல் அமைப்பு ஏற்படுத்தியுள்ளது.
4. அரசு இடைக் கடல் வரைவியல் ஆணையத்திற்குத் தன் ஒத்துழைப்பை வழங்குவது.
5. கடல் உற்றுநோக்கு அமைப்புகளை உருவாக்கியுள்ளது.
6. தேசியக் கடல் தொழில்நுட்ப நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.
7. கடல்விதி மற்றும் அண்டார்க்டிக் உடன்படிக்கை அமைப்பிலும் பணி செய்தல்.
8.கடலை ஆராயும் ஓவுன்சட் என்னும் செயற்கை நிலாவை 1996 மே 2 0இல் ஏவியது.
9. இந்தியக் கடல் ஆய்வுத் திட்டத்தைச் செயற் படுத்துகிறது.
4. இந்தியக் கடல் ஆய்வுத்திட்டம் என்றால் என்ன?
இது அமெரிக்கத் தேசிய அறிவியல் நிறுவனத்தின் ஆதரவில் நடைபெறும் திட்டம்.
5. இத்திட்டத்தின் நோக்கமென்ன?
1. காற்றில் சேர்ந்துள்ள மாசுகள் புவியைக் குளிர் விப்பதை ஆராய்வது.
2. உலகம் வெப்பம் அடைதலால் ஏற்படும் தீய விளைவுகளை நீக்குதல்.
6. இது எப்பொழுது தொடங்கியது? செலவு என்ன?
1999இல் தொடங்கியது. செலவு 25 மில்லியன் டாலர். அமெரிக்க அறிவியலாரும் இந்திய அறிவியலாரும் கலந்து கொள்கின்றனர்.
7. இந்தியத் தேசியக் கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நோக்கம் என்ன?
கடலின் அனைத்து வளங்களையும் காணும் தொழில் நுட்பங்களை உருவாக்கல்.
8. மண்டல ஆராய்ச்சி நிலையம் யாரால் எப்பொழுது நிறுவப் பட்டது?
1947இல் மைய அரசால் இராமேஸ்வரத்தில் மண்டபம் என்னுமிடத்தில் தொடங்கப்பட்டது.
9. இதன் பணிகள் யாவை?
இது கடல் துறை மைய மீன் ஆராய்ச்சி நிலையம். இதற்கு இந்தியா முழுதும் கிளைகள் உள்ளன. இந் நிலையம் கடல் மீன்களைப் பற்றி ஆராய்ச்சி நடத்திய வண்ணம் உள்ளது.
10. கடல்துறை சார்பாக ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் பணிகள் யாவை?
1952இல் இப்பல்கலைக்கழகம் பல கடல் பயணங்களுக்கு ஏற்பாடு செய்தது. இதற்கு இந்தியக் கடற்படை உதவிற்று. பயணங்கள் வங்காளவிரிகுடாவில் மேற் கொள்ளப்பட்டன. அவற்றால் கிடைத்த முடிவுகளில் சிலவற்றை 1954-1958இல் இரு கடல் தொகுதிகளில் வெளியிட்டது.
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடல் ஆராய்ச்சி - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - கடல், இதன், யாவை, என்ன, இந்தியக், நிலையம், ஆராய்ச்சி, தேசியக், மேலாண்மை