புவியியல் :: கடல் ஆராய்ச்சி
21. 1970க்குப் பின் கடல் பற்றிக் கிடைத்த புதிய செய்திகள் யாவை?
1. ஒரிமம் - இரும்பு-60 என்னும் ஒரிமம் (ஐசோடோப்பு) கடல் தரையில் நிரம்ப உள்ளது.
2. ஆழமான வாஸ்தோக் ஏரியின் அடியில் குச்சி வடிவ உயிரிகள் வாழ்கின்றன. எ-டு. பைரோலோபஸ் பியுரேட் 113' செ. வெப்பநிலையில் வாழ்வது வியப்பிற்குரியது.
3. 1930களிலிருந்து உலகப் பெருங்கடல்கள் மட்டம் 10செ.மீ. அளவு உயர்ந்து வருகிறது.
4. கடலில் பல வெப்பநீர் ஊற்றுகள் உள்ளன.
5. கடல்கள் நலிந்து வருகின்றன. இதற்குச் சூழ்நிலைப் புறக்கணிப்பே காரணம்.
6. மாரிக்காலத்தில் அமெரிக்கா அளவுக்கு மேக மூட்டம் இந்தியப் பெருங்கடலைச் சூழ்ந்துள்ளது.
7. இந்தியத் துணைக் கண்டம் வடக்கு நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளது.
8. 1985லிருந்து பார்க்க, ஆர்க்டிக் கடல் இரு மடங்கு வெப்பமடைந்துள்ளது.
9. உலகம் வெப்பமடைவதால் அண்டார்க்டிக்கிலுள்ள பனிக்கட்டித் தளங்கள் தடிக்கின்றன.
10. 2040க்குள் இந்தியத் துணைக் கண்டத்தின் வெப்ப நிலை 10:செக்கு உயரும்.
11. அட்லாண்டிக் பெருங்கடலில் வெப்பப் பாறைகள் உள்ளன.
22. நாய்ஸ் என்பது என்ன?
தேசியக் கடல் தகவல் அமைப்பு. இதுவும் மைய அரசு சார்ந்தது. (National Ocean on Information Service system) இதில் 13 தகவல் மையங்கள் உள்ளன. கோவாவிலுள்ள தேசியத் தகவல் மையமும் தகவல்களை இத்துடன் அவ்வப்பொழுது பரிமாறிக் கொள்வது.
23. ஐஒசி என்றால் என்ன?
அரசு இடைக் கடல் வரைவியல் ஆணையம். (InterGovernmental Oceanographic Commission) யுனஸ்கோ. கட்டுப்பாட்டில் உள்ளது. பாரிசில் செயற்படுவது. அனைத்து நாடுகளும் இதில் பங்கு கொள்கின்றன.
24. இந்தியத் தேசியத் தொலையறிவியல் முகமையகம் எங்குள்ளது?
அய்தராபாத்தில் உள்ளது.
25. கடற்பொறி இயல் என்றால் என்ன?
இது முற்றிலும் புதிய துறை. அறிவியல் துறைகள் பலவற்றைத் தன்னுள் அடக்கியது. பொறிஇயல், வானிலை இயல், புவி அமைப்பியல், கடல் அறிவியல், மாசுக்கட்டுப்பாடு, கடல் கட்டுமானம், கடல் ஆற்றலைப் பெறுதல், கடல் வளத்தைப் பயன்படுத்தல் முதலியவை இதன்கண் அடங்கும்.
26. வானவெளிக் கலக் கடலியல் எப்பொழுது தோன்றிற்று?
1957இல் தோன்றிற்று.
27. இதன் நோக்கம் என்ன?
இதில் வானவெளிக் கலங்கள் கடல்களை ஆராய்ந்து பல பயனுள்ள செய்திகளைத் திரட்டியுள்ளன.
28. வானவெளிக் கலக் கடலியலின் பயன்கள் யாவை?
1. கடல் மேற்பரப்பு வெப்ப நிலைகள் வானவெளிக் கலங்களின் உதவியினால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2. அமெரிக்க நிம்பஸ் வானிலை நிலா கல்ப் நீரோட் டத்தை அறிந்து, அதில் சிக்கிய மீன்கப்பலை மீட்க உதவியது.
3. அமெரிக்க டிராஸ் நிலாக்கள் இந்தியக் கடலில் உருவாகிய புயல்களை முன்கூட்டியே அறிவித்தன.
4. கடல்நீரின் வெப்பநிலையைக் கொண்டு மீன்பிடிக்கும் இடங்களை வானவெளிக் கலங்களைக் கொண்டு அறியலாம்.
5. அமெரிக்க ஜெமினி கப்பல்களிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் கடல் தரை பற்றியும் நீரோட்டங்கள் பற்றியும் அறிய அதிகம் உதவியுள்ளன.
6. கப்பல் போக்குவரத்துக்கு அமெரிக்கக் கப்பல் போக்குவரத்து நிலாக்கள் அதிகம் உதவின.
7. கடல் ஆராய்ச்சி செய்யும் கப்பல்கள் மிதவைகள் ஆகியவை திரட்டும் தகவல்களைச் செய்தி நிலாக்கள் அஞ்சல் செய்யும்.
29. கடலிலுள்ள ஆழமான அகழ் எது?
மரியானாஸ் அகழ். பசிபிக் கடலில் உள்ளது. இதன் ஆழம் 11,033 மீ.
30. அனைத்துலகக் கடல்விழா எங்கு எப்பொழுது நடந்தது?
1996இல் பிரிட்டனில் நடந்தது. 700க்கு மேற்பட்ட கப்பல்கள் இதில் கலந்து கொண்டன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடல் ஆராய்ச்சி - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - கடல், வானவெளிக், உள்ளது, இதில், என்ன, நிலாக்கள், அமெரிக்க, கடலில், இந்தியத், தகவல்