புவியியல் :: கடல் ஆராய்ச்சி

31. கடல்வள வியப்புச் செய்திகள் யாவை?
1. 63 விலங்கு வகுப்புகளில் 51 வகுப்புகள் கடலில் வாழ்கின்றன. இவற்றில் அடங்கும் வகைகள் 1,50,000. இவ்வகைகளில் அதிகமுள்ளவை நத்தைகள். (60,000 வகைகள். அடுத்துள்ளது 20,000 வகை நண்டினங்கள். மீன் வகைகள் 16,000.
2. உலகக் கடல்களில் 300 வேறுபட்ட உயிர்கள் வாழ்கின்றன. கடல் ஆராய்ச்சியின் விளைவாக 100 புதிய கடல் உயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
3. உலகின் 7இல் 5 பங்கு கடல்.
4. உலக எண்ணெய் உற்பத்தியில் 6 இல் 1 பங்கு கடல் படுகையிலிருந்து கிடைக்கிறது.
5. உலகக் கடல்களின் நீரளவு 329 மில்லியன் கன அலகுகள்.
6. கடலில் உண்டாகும் தாவரங்களில் பாதி செம்பாதி யங்கள்.
7. கடலில் காணப்படும் மிதவை உயிர்கள் முதல்நிலை உணவு உற்பத்தியாளர்கள். இவை மீன், திமிங்கிலம் முதலிய கடல் உயிர்களுக்கு உணவு.
8. கடல் விலங்குகளும் தாவரங்களும் சிறந்த மருந்துகளையும் தருகின்றன. பட்டர் மீனிலிருந்து கிடைக்கும் நஞ்சிலிருந்து மருந்து செய்யப்படுகிறது. இம்மருந்தான எட்ரோடோசின் ஆற்றல் வாய்ந்த வலி நீக்கி.
9. கடல் பூண்டுகளிலிருந்து கிடைக்கும் காரம் ஆல்ஜின். இது பல வகைப் பொருள்கள் செய்யப் பயன்படுகிறது.
(1) பொருள்களைச் சுற்றும் தீப்பற்றாத்தாள்.
(2) உணவுப்பொருள்கள், மருந்துப்பொருள், வண்ணங் கள், நறுமணப்பொருள்களைச் சுற்ற.
(3) அறுவையின்பொழுது குருதிக் கசிவை நிறுத்தப் பயன்படுவது.
32. கடலின் புதிய பயன்கள் யாவை?
1. நீர்த் தேக்கங்கள், காற்று வெளியேறா அறைகள் அமைக்கப்படும்.
2. கடல் மேற்பரப்பில் நிறுவப்படும் நகரங்கள் மக்கள் நெருக்கத்தைக் குறைக்கும்.
3. மக்கள் மகிழக் கடலுக்கு அடியில் மனமகிழ் பூங்காக்கள் அமைக்கப்படும்.
4. போக்குவரத்துக்குக் கடல் ஊர்திகள் பயன்படும்.
5. உணவுக்காகக் கடல்பூண்டுகளும் தாவரங்களும் வளர்க்கப்படும்.
6. அலைகளிலிருந்து ஆற்றல் உற்பத்தி செய்யப்படும்.
7. நன்னிருக்காகவும் பனிக்கட்டிக்காகவும் நீண்ட தொலைவுகளுக்குப் பனிப்பாறைகள் நீரில் இழுத்துச் செல்லப்படும்.
8. வானிலையைக் கண்காணிக்கவும் அதனை முன்னறிவிக்கவும் திருத்தவும் கடல் பயன்படும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடல் ஆராய்ச்சி - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - கடல், உயிர்கள், வகைகள், கடலில்