புவியியல் :: கடல் ஆராய்ச்சி
11. அண்ணாமலைப் பல்கலைக்கழகக் கடல்துறைப் பணி யாது?
கடல் உயிர் ஆராய்ச்சி நிலையம் பறங்கிப்பேட்டையில் உள்ளது. இது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தோடு தொடர்புள்ளது.
12. கடல் ஆராய்ச்சி செய்யும் பிற பல்கலைக் கழகங்கள் யாவை?
சென்னை, திருவனந்தபுரம், பம்பாய் முதலிய பல்கலைக் கழகங்களும் கடல்துறை ஆராய்ச்சிகள் செய்கின்றன.
13. கடல் ஆராய்ச்சிக்கு உதவும் மைய அரசு அமைப்பு எது?
அறிவியல் - தொழில் ஆராய்ச்சி மன்றம்.
14. ஜக்கார்ஜி-92 என்றால் என்ன?
இது ஒரு மூன்றுநாள் மாநாடு. நேரு தொழில்நுணுக்கப் பல்கலைக் கழகத்தில் 1992 பிப்ரவரியில் நடைபெற்றது. தொலையறிதல், புவிச் செய்தி அமைப்பு இரண்டும் பற்றி ஆராய்ச்சி நடைபெற்றது. அனைத்துலக வான வெளி ஆண்டுத் தொடர்பாக நடைபெற்றது.
15. இன்மார்சட் என்பது யாது?
இது அனைத்துலகக் கப்பல் நிலா. தகவல்களை உடனுக் குடன் கப்பல்களுக்கு அளிப்பது.
16. தொலையறிவியல் என்றால் என்ன?
செயற்கை நிலாக்கள் மூலம் செய்திகள் சேகரிப்பதை ஆராயுந்துறை.
17. இது எப்பொழுது உருவாகியது?
1970களில் வானவெளி ஆராய்ச்சியால் உருவாகியது.
18. இதன் பயன்கள் யாவை?
கப்பல் போக்குவரத்திற்கும் கடல் ஆராய்ச்சிக்கும் வானிலை முன்னறிவிப்பிற்கும் பெரிதும் பயன்படுவது.
19. இவ்வறிவியலில் வல்லவர் யார்?
டாக்டர் நாராயணன்.
20. இந்தியா ஏவும் இவ்வறிவியல் நிலாக்களுக்கு என்ன பெயர்?
ஐஆர்எஸ் நிலாக்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடல் ஆராய்ச்சி - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - ஆராய்ச்சி, பல்கலைக், நடைபெற்றது, என்ன, கடல்