கசாட்டா
தேவையானவை:
பிஸ்தா - கால் கிலோ
சர்க்கரை - அரை கிலோ
குளுக்கோஸ் லிக்யூட் - 100 கிராம்
முந்திரி - அரைகிலோ
செய்முறை:
பிஸ்தாவை நன்றாக கொதித்த தண்ணீரில் போடவும். 5 நிமிடம் கழித்து பிஸ்தாவை எடுத்து தேய்த்தால் தோல் தனியாக வந்துவிடும். பின்பு அதை மைபோல அரைக்கவும். இரும்பு கடாயில் பிஸ்தாவுடன் சர்க்கரை கொட்டி கிண்டவும். தீயை மிதமாக வைத்து கலவை இறுகும் வரை கிளறி ஒட்டாத பக்குவத்துக்கு வந்ததும் பாத்திரத்தில் கொட்டி ஒரே உருண்டையாக்கவும். சூடு ஆறியதும் 10 கிராம் அளவில் சிறு உருண்டைகளாக பிடிக்கவும். முந்திரியுடன் குளுகோஸ் லிக்விட் கலந்து (ஒட்டாமல் இருக்க நெய் தடவிக் கொள்ளவும்.) அதை சிறு உருண்டைகளாக உருட்டவும். தேவையென்றால் க்ரீன் கலர் சேர்க்கலாம். முந்திரி உருண்டை மேல் பாதாம் விழுதைப் பூச வேண்டும். இப்போது ஒரு முழு உருண்டை க்ரீன் கலரில் இருக்கும். உருண்டையை நடுபாகத்தில் வெட்டி இரண்டாக பிரித்தால் சுவையான கசாட்டா ரெடி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 64 | 65 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கசாட்டா, 65 வகையான உணவுகள், 65 Type Recipes, , Recipies, சமையல் செய்முறை