பொரி ஸ்பாஞ்ச்
தேவையான பொருட்கள்:
அரிசிப் பொரி - 1/2 லிட்டர்
ரவை - 2 டேபிள் ஸ்பூன்
மைதா மாவு - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 100 கிராம்
ஏலப்பொடி - சிறிது
தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
தேனும் ஒரு வாழைப்பழம் கனிந்தது - 1.
முந்திரிப் பருப்பு - 4, 5 (துண்டுகளாக்கிக் கொள்ளவும்).
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
சமையல் சோடா - மிகத் துளி.
செய்முறை:
முந்திரிப் பருப்பு, நெய் தவிர மேற்கண்ட அனைத்துப் பொருட்களையும் மிக்ஸியில் மிகக் குறைந்த அளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும், விருப்பப்பட்டால் துளிலெமன் மஞ்சள் கலர் சேர்த்து, துண்டுகளாக்கிய முந்திரி, உருக்கிய நெய், சமையல் சோடா சேர்த்து நன்கு கலக்கவும். குக்கர் தட்டில் நெய் தடவி, கலவையைப் பரத்தவும். குக்கரில் தண்ணீர் வைத்து, குக்கர் தட்டுப் பாத்திரத்தை அதனுள் வைத்து இட்லி வேக விடுவது போல் (வெயிட் போடாமல்) வேகவிடவும். சற்று ஆறியபின், விரும்பிய ஷேப்பில் கட் செய்து பரிமாறவும். ஸ்பாஞ்ச் போன்ற இது, பன் மாதிரி இருக்கும். மைக்ரோவேன் இருப்பவர்கள் அதிலும் செய்யலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 64 | 65 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொரி ஸ்பாஞ்ச், 65 வகையான உணவுகள், 65 Type Recipes, நெய், சேர்த்து, ஸ்பூன், டேபிள், Recipies, சமையல் செய்முறை