பொரி (கார) டோக்ளா
தேவையான பொருட்கள்:
ரவை - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப
மிளகு - 1 டீஸ்பூன்
தாளிக்க - கடுகு
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
புளித்த மோர் - கால் தம்ளர் (திக்காக)
சமையல் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பொரி (அரிசிப் பொரி) - 1/2 லிட்டர்
அலங்கரிக்க - கருவேப்பிலை, கொத்துமல்லி, பச்சை மிளகாய்
செய்முறை:
பொரியை புளித்த மோரில் ஊறவைக்கவும். ஐந்து நிமிடம் ஊறியபின், தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து, மிக்ஸியில் ஒரு அரை அரைத்துக் கொள்ளவும். ரவை, கடலை மாவு சேர்த்து மிளகைக் கரகரப்பாகத்தட்டிப் போடவும். சமையல் எண்ணெயைக் கலக்கவும். ஸ்வீட் ஸ்பாஞ்ச் வேகவிட்டது போல, இதையும் வேகவிடவும். ஆறியபின், சதுரமாகக் கட் செய்யவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு பச்சை மிளகாய்ப் பொடியாக அரிந்து தாளித்து கருவேப்பிலை, பச்சை கொத்துமல்லி பொடியாக நறுக்கி, மேலே து‘வவும், பொரி டோக்ளா சாப்பிட சுவையாக இருக்கும்.
குறிப்பு:
பொரி மட்டும் கைவசம் வைத்திருந்தால் ரவை கேசரி போல் உடனே செய்துவிடலாம் உடம்புக்கு நல்ல, வித்தியாசமான உணவு, அரிசி முட்டைப் பொரியிலேயே சற்று உப்பு இருப்பதால், டோக்ளா செய்யும் போது உப்பு சேர்ப்பதில் கவனமாக இருக்கவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 64 | 65 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொரி (கார) டோக்ளா, 65 வகையான உணவுகள், 65 Type Recipes, பொரி, உப்பு, பச்சை, ஸ்பூன், டேபிள், Recipies, சமையல் செய்முறை