அடை

தேவையான பொருள்கள் :
புழுங்கல் அரிசி - 1/4 கிலோ
பச்சரிசி - 1/4 கிலோ
கடலைப் பருப்பு - 1/4 கிலோ
துவரம் பருப்பு - 1/4 கிலோ
பாசிப் பருப்பு - 100 கிராம்
உளுந்தம் பருப்பு - 100 கிராம்
மிளகாய் வற்றல் - 10
தேங்காய் - 1/2 மூடி
சீரகம், சோம்பு - 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1 ஸ்பூன்
எண்ணெய் - 200 கிராம்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - கொஞ்சம்
வெங்காயம் - 5
செய்முறை :
புழுங்கல் அரிசி, பச்சரிசியை ஊற வைக்கவும். பருப்பு வகைகளையும் ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும், அவற்றுடன் மிளகாய் வற்றல், சீரகம், சோம்பு, உப்பு சேர்த்து நெறுநெறுவென மாவாக ஆட்டிக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
வெங்காயத்தைப் பொடியாக வெட்டிக் கொள்ளவும். கறிவேப்பிலையை நறுக்கிக் கொள்ளவும். மாவுடன் தேங்காய்த் துருவல், வெங்காயத் துண்டுகள், கறிவேப்பிலைத் துணுக்குகள் ஆகியவற்றைச் சேர்த்து, பெருங்காயம் போட்டுக் கலக்கி விட்டுக் கொள்ளவும். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, எண்ணெய்த் துணியால் துடைத்துக் கொள்ளவும். தீயை நிதானமாக எரிய விடவும்.
மாவைத் தோசை மாவுப் பதத்திற்குக் கரைத்து, கரண்டியினால் எடுத்து ஊற்றி வட்டமாகப் பரப்பி, மேலே எண்ணெய் தெளித்து, மூடவும். வெந்ததும், தோசை திருப்பியினால் திருப்பிப் போட்டு, மறுபடியும் எண்ணெய் தெளித்து, பவுன் நிறமாக வெந்த பிறகு, எடுத்துத் தட்டில் வைத்துச் சாப்பிடவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 55 | 56 | 57 | 58 | 59 | ... | 64 | 65 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அடை, 65 வகையான உணவுகள், 65 Type Recipes, கொள்ளவும், பருப்பு, கிலோ, கிராம், எண்ணெய், Recipies, சமையல் செய்முறை