வாழைக்காய் பஜ்ஜி
தேவையான பொருள்கள் :
வாழைக்காய் - 5
கடலைப் பருப்பு மாவு - 1/2 கிலோ
எண்ணெய் - 500 கிராம்
மிளகாய்த தூள் - போதுமான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
வாழைக்காய்களைத் தோல் சீவாமல் அரிவாள் மணையில் அல்லது தற்காலத்தில் வந்திருக்கும் சீவு கருவியில், நீள வாக்கில் துண்டுகளாக அரிந்து கொள்ளுங்கள். கடலைப் பருப்பு மாவில் மிளகாய்த் தூளைக் கலந்து, தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்புப் போட்டுக் கரைத்துக் கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணெயை ஊற்றிக் காய வைக்கவும். ஒவ்வொரு வாழைக்காய்ச் சீவலாக எடுத்து, கடலைப் பருப்பு மாவுக் கலவையில் பக்குவமாய்த் தோய்த்து, காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு, வேக விடுங்கள். வெந்ததும் எடுத்துத் தட்டில் போட்டுக் கொள்ளுங்கள். சுடச் சுடத் தின்றால், வாழைக்காய் பஜ்ஜி மிகவும் சுவையாக இருக்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 57 | 58 | 59 | 60 | 61 | ... | 64 | 65 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாழைக்காய் பஜ்ஜி, 65 வகையான உணவுகள், 65 Type Recipes, கொள்ளுங்கள், அளவு, பருப்பு, கடலைப், தேவையான, Recipies, சமையல் செய்முறை