அதிரசம்

தேவையான பொருள்கள் :
பச்சரிசி - 1 கிலோ
வெல்லம் - 1 கிலோ
ஏலக்காய் - 10
டால்டா - 1 கிலோ
தண்ணீர் - 1 கப்
செய்முறை:
அரிசியை ஊற வைத்து, நிழலில் உலர்த்தி, நெறுநெறுவென மாவாக அரைத்துச் சல்லடையில் சலித்து வைத்துக் கொள்ளவும்.
வெல்லத்தைத் தூளாக்கிக் கொண்டு, அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்துப் பாகு காய்ச்சவும்.
அந்தப் பாகை வடி கட்டவும். மறுபடியும் அடுப்பில் வைத்துக் கம்பிப் பதமாகப் பாகு வரும்போது, அரிசி மாவை அதில் போட்டுக் கிளறவும்.
தீயை நிதானமாக எரிக்கவும். கட்டி இல்லாமல், மாவைக் கிளறிக் கொண்டே இருக்கவும். மாவை நெய் கையால் தொட்டுப் பார்த்தால், அது ஒட்டக் கூடாது.
ஏலக்காயைத் தூள் செய்து மாவில் போட்டுக் கிளறவும். மாவை இறக்கி வைக்கவும். வாணலியில் டால்டாவை ஊற்றிக் காய வைக்கவும். மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டையாகத் தட்டி, டால்டாவில் போடவும். அப்பளம் மாதிரி உப்பி வரும்போது, திருப்பிப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
நாலைந்து நாட்களானாலும் அதிரசம் கெடாது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 53 | 54 | 55 | 56 | 57 | ... | 64 | 65 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அதிரசம், 65 வகையான உணவுகள், 65 Type Recipes, மாவை, கிலோ, Recipies, சமையல் செய்முறை