அக்கார அடிசில்

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், வறுத்த பாசிப்பருப்பு - கால் கப், பால் - 8 கப், பொடித்தவெல்லம் - ஒரு கப், கண்டென்ஸ்டு மில்க் - கால் கப், நெய் - கால் கப், சீவிய பாதாம் - ஒருடேபிள்ஸ்பூன், ஏலக்காய்தூள் - கால் டீஸ்பூன், குங்குமப்பூ - சிறிதளவு.
செய்முறை: பாலை அடுப்பில் வைத்துக் காய்ச்சுங்கள். அரிசி, பருப்பை ஒன்றாகக் கழுவி, பாலுடன்சேருங்கள். சிறு தீயில் வைத்து, அரிசி, பருப்பு நன்கு வேகும் வரை, பால் வற்றும் வரைகிளறுங்கள். ஒரு பாத்திரத்தில், வெல்லத்தில் கால் கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து,கரைந்ததும் வடிகட்டி, சாதத்தில் ஊற்றிக் கிளறுங்கள். அத்துடன் நெய் மற்றும் கண்டென்ஸ்டு மில்க்சேர்த்து, அடிபிடிக்காமல் விடாமல் கிளறுங்கள் (இல்லையெனில், கண்டென்ஸ்டு மில்க் உடனேயேஅடிபிடித்துவிடும்). சற்று சேர்ந்தாற்போல வந்ததும், சீவிய பாதாம், ஏலக்காய்தூள் சேர்த்துஇறக்குங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அக்கார அடிசில், 30 வகையான வெரைட்டி ரைஸ், 30 Type Varity Rice, கால், கண்டென்ஸ்டு, Recipies, சமையல் செய்முறை