ஸ்பெஷல் தயிர் சாதம்
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், பால் - 6 கப், உப்பு - தேவையான அளவு,பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மல்லித்தழை, கறிவேப்பிலை - தலா சிறிதளவு, தயிர் - அரைகப்.தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், மோர் மிளகாய் - 5,முந்திரிப்பருப்பு - 8, திராட்சை - 10, எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: பாலுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து, கழுவிய அரிசி சேர்த்து சிறுதீயில் நன்கு வேகவிடுங்கள். அரிசி நன்கு குழைந்ததும், பெருங்காயம் சேர்த்து கிளறி இறக்கிஆறவிடுங்கள். ஆறியதும், எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைதாளித்து சேருங்கள். அத்துடன் பொடியாக நறுக்கிய மல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு, தயிர்சேர்த்து நன்கு கலந்து குளிர வைத்து பரிமாறுங்கள். விருப்பப்பட்டால், பொடியாகத் துருவியகேரட், வெள்ளரி சேர்க்கலாம். மாதுளை முத்துக்களையும் சேர்க்கலாம். கலர்ஃபுல்லாகவும் அதிகருசியுடனும் இருக்கும்.குறிப்பு: ஆனால், இந்த முறையில் செய்யும் தயிர்சாதம் 3 மணி நேரத்துக்கு மேல் இருந்தால்,புளித்துவிடும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்பெஷல் தயிர் சாதம், 30 வகையான வெரைட்டி ரைஸ், 30 Type Varity Rice, டீஸ்பூன், நன்கு, சேர்த்து, Recipies, சமையல் செய்முறை