வெள்ளரி சாதம்
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், வெள்ளரித் துருவல் - அரை கப், பச்சை மிளகாய் - 4,இஞ்சி - ஒரு துண்டு, எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு.தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். பச்சை மிளகாய், இஞ்சியைப்பொடியாக நறுக்குங்கள். நெய்யைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, இஞ்சி, பச்சைமிளகாய், பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து, வெள்ளரி துருவலையும் உப்பையும் சேர்த்து, 5நிமிடம் வதக்கி இறக்குங்கள். அந்தக் கலவை யுடன் சாதம், எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துக் கிளறிப்பரிமாறுங்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெள்ளரி சாதம், 30 வகையான வெரைட்டி ரைஸ், 30 Type Varity Rice, சேர்த்து, Recipies, சமையல் செய்முறை