ஆந்திரா சர்க்கரை பொங்கல்

தேவையானவை: பச்சரிசி அல்லது பாசுமதி அரிசி - ஒரு கப், பாசிப்பருப்பு - கால் கப், சர்க்கரை- ஒரு கப், ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், குங்குமப்பூ - சிட்டிகை, கேசரிகலர் - ஒரு சிட்டிகை.தாளிக்க: பல்லுபல்லாக நறுக்கிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய முந்திரிப்பருப்பு - ஒருடேபிள்ஸ்பூன், திராட்சை - 8, நெய் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அரிசி, பருப்பை தனித்தனியே உதிராக வேகவைத்துக்கொள்ளுங்கள். சர்க்கரையுடன்கால் கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வையுங்கள். அது கொதித்து, சற்று கெட்டியானதும் சாதம்,பருப்பு, நெய், ஏலக்காய்தூள், கேசரி கலர், குங்குமப்பூ சேர்த்து கிளறி இறக்குங்கள். நெய்யில்,முந்திரி, தேங்காய், திராட்சை வறுத்து சேர்த்துக் கிளறிப் பரிமாறுங்கள். விருந்துகளுக்கும்பண்டிகைகளுக்கும் ஏற்ற சாதம் இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 18 | 19 | 20 | 21 | 22 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆந்திரா சர்க்கரை பொங்கல், 30 வகையான வெரைட்டி ரைஸ், 30 Type Varity Rice, நெய், Recipies, சமையல் செய்முறை