வேர்க்கடலை பொடி சாதம்

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு,வறுத்த வேர்க்கடலை - கால் கப்.தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு,எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.வறுத்து பொடிக்க: உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கொப்பரை துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,காய்ந்த மிளகாய் - 5, சீரகம் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் -2 டீஸ்பூன்.
செய்முறை: பச்சரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்து வையுங்கள். வேர்க்கடலையை தோல்நீக்குங்கள். வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக சிவக்க வறுத்து, அத்துடன்வேர்க்கடலையையும் சேர்த்து பொடித்துக்கொள்ளுங்கள். கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலைதாளித்து சாதத்தில் சேர்த்து, அத்துடன் நெய், வறுத்துப் பொடித்த பொடி சேர்த்து நன்கு கலந்துபரிமாறுங்கள்.வேர்க்கடலை மணத்துடனும் வித்தியாசமான சுவையுடனும் அசத்தும் இந்த புதுமையான சாதம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேர்க்கடலை பொடி சாதம், 30 வகையான வெரைட்டி ரைஸ், 30 Type Varity Rice, டீஸ்பூன், சேர்த்து, உளுத்தம்பருப்பு, டேபிள்ஸ்பூன், Recipies, சமையல் செய்முறை