வாழைப்பழ ஜாம் ரோல்ஸ்
தேவையானவை: பிஸ்கட் தூள் - ஒரு கப், ஏதாவது ஒரு ஜாம் - 3 டீஸ்பூன், வாழைப்பழம் - 4(ரொம்பவும் பழுத்திருக்கக் கூடாது).
செய்முறை: வாழைப்பழத்தை நீளவாக்கில் நறுக்கவும். ஜாமில் சிறிது தண்ணீர் சேர்த்து, ஸ்பூனால்கிளறினால் இளகி வரும். வெட்டிய வாழைப்பழ துண்டுகளை, இந்த ஜாமில் தோய்த்து, பிஸ்கட்தூளில் பிரட்டி பரிமாறவும். இரண்டே நிமிடங்களில் சூப்பரான ஸ்நாக்ஸ் ரெடி. சத்தானதும் கூட.குறிப்பு: பிஸ்கட் தூளில், முந்திரி, பாதாம் தூள்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாழைப்பழ ஜாம் ரோல்ஸ், 30 வகையான டிபன், 30 Type Tiffion, , Recipies, சமையல் செய்முறை