காக்ரா ரோல்ஸ்
தேவையானவை: மைதா - ஒரு கப், தேங்காய் துருவல் - கால் கப், கடலைமாவு - 3டேபிள்ஸ்பூன், எள் - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப,எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: மைதாமாவில் சிறிது நீர் விட்டு பிசைந்து கொள்ளவேண்டும். தேவைப் பட்டால்எண்ணெய் சிறிது சேர்த்துப் பிசையலாம். 2 அல்லது 3 மணிநேரம் ஊறவேண்டும். பிறகு,கடலைமாவு, சிறிதளவு உப்பு, தேங்காய் துருவல், மிளகாய்தூள், எள் சேர்த்து பிசையவும். பிசைந்துவைத்திருக்கும் மைதாவை நீள்செவ்வகமாக இட்டு, இதில் தேங்காய் கலவையை பரப்பி, பாய்போல் சுருட்டி, பத்து நிமிடம் வைத்திருக்கவும். பிறகு, இந்த உருளையை அரை இன்ச் கனத்துக்குகத்தியால் வெட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காக்ரா ரோல்ஸ், 30 வகையான டிபன், 30 Type Tiffion, தேங்காய், Recipies, சமையல் செய்முறை