சோயா சேமியா
தேவையானவை: சேமியா - 1 கப், சோயா நக்கட்ஸ் - 10, பெரிய வெங்காயம் - 2, வெங்காயத் தாள் - ஒருகைப்பிடி, சோயா சாஸ் - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.அரைக்க: மிளகாய்தூள் - ஒன்றரை டீஸ்பூன், பூண்டு - 6 பல்.
செய்முறை: 6 கப் தண்ணீரை கொதிக்க வைத்து சேமியாவை வேக வைத்து வடியுங்கள். கொதிக்கும் நீரில்சோயாவை போட்டு 10 நிமிடம் கழித்து பிழிந்து எடுத்து, பச்சை தண்ணீரில் இருமுறை அலசிபிழிந்துகொள்ளுங்கள். சிறு துண்டுகளாக நறுக்குங்கள். வெங்காயத்தை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்குங்கள்.மிளகாய்தூள், பூண்டு சேர்த்து ஒன்றாக அரையுங்கள். எண்ணெயை நன்கு காய வைத்து அரைத்த விழுதைசேருங்கள். பச்சை வாசனை போனதும் வெங்காயம், சிறிது உப்பு, பிழிந்துவைத்திருக்கும் சோயா சேர்த்து நன்குவதக்கி, சோயா சாஸ், சேமியா, வெங்காயத் தாள், தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 20 | 21 | 22 | 23 | 24 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சோயா சேமியா, 30 வகையான சேமியா உணவுகள், 30 Type Semiya, சோயா, சேர்த்து, உப்பு, வைத்து, Recipies, சமையல் செய்முறை