இலைப் பொடி
தேவையானவை: நரம்பு நீக்கிய எலுமிச்சை இலை, நாரத்தை இலை, புளியங்கொழுந்து,விளாங்கொழுந்து - (நான்கும்) தலா இரண்டு கைப்பிடி, காய்ந்த மிளகாய் - ஒரு கப், பெருங்காயம்- சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, புளி - சிறிதளவு.
செய்முறை: வெறும் வாணலியில் புளியை சிறுதுண்டுகளாக்கிப் போட்டு வறுத்தெடுக்கவும். காய்ந்தமிளகாய், உப்பு, புளி ஆகிய மூன்றையும் சேர்த்து நன்கு பொடியாக்கிக் கொள்ளவும். இலைவகைகளை நன்கு இடித்துக் கொள்ளவும் (இடிக்கும் வசதி இல்லாதவர்கள், மிக்ஸியில் போட்டுசுற்றிக் கொள்ளவும்). பிறகு அத்துடன் மிளகாய் பொடித்ததையும் சேர்த்து நன்கு இடித்து, ஜாடியில்பத்திரப்படுத்திக் கொள்ளவும். சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் நாக்குக்கு அவ்வளவு ருசியாகஇருக்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலைப் பொடி, 30 வகையான பொடி, 30 Type Podi, கொள்ளவும், நன்கு, Recipies, சமையல் செய்முறை