ரசப் பொடி
தேவையானவை: காய்ந்த மிளகாய் - ஒரு கப், தனியா - கால் கப், மிளகு - 2 டேபிள்ஸ்பூன்,வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டேபிள்ஸ்பூன்,துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு, விரலி மஞ்சள் (சிறியது) - 1,எண்ணெய் - வறுக்க.
செய்முறை: காய்ந்த மிளகாயை தவிர மற்ற பொருட்களை எண்ணெய் விடாமல் தனித்தனியேவறுத்துக் கொள்ளவும். மிளகாயை மட்டும் சிறிது எண்ணெய் விட்டு பக்குவமாக வறுத்துஎடுக்கவும். மிஷினில் அல்லது மிக்ஸியில் மிளகாயைத் தனியாக அரைத்துக்கொள்ளவும். மற்றபொருள்களையும் தனியாக அரைத்துக் கொள்ளவும். இரண்டு பொடிகளையும் நன்றாகக் கலந்துபாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும். ரசம் வைக்கும் பொழுது தேவையான அளவுபொடியைப் போட்டு ரசம் வைத்தால், ரசத்தின் ருசியும், மணமும் நன்றாக இருக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ரசப் பொடி, 30 வகையான பொடி, 30 Type Podi, டேபிள்ஸ்பூன், கொள்ளவும், எண்ணெய், Recipies, சமையல் செய்முறை