வெங்காயம் அரைத்த குழம்பு

தேவையானவை: சின்ன வெங்காயம் - ஒரு கப், முருங்கைக்காய் - 2 (அல்லது) கத்தரிக்காய் - 4,தக்காளி - 3, புளி - நெல்லிக்காய் அளவு, மிளகாய்தூள் - 2 டீஸ்பூன், தனியாதூள் - 2 டீஸ்பூன்,மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மல்லித்தழை, கறிவேப்பிலை - தலா சிறிதளவு, உப்பு - தேவையானஅளவு. அரைக்க: சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 4, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,சீரகம் - 1 ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு. தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், வெந்தயம் -அரை டீஸ்பூன், எண்ணெய் - கால் கப்.
செய்முறை: வெங்காயத்தை தோலுரித்து இரண்டாக நறுக்குங்கள். முருங்கைக்காய் அல்லதுகத்தரிக்காயை நீளத் துண்டுகளாக நறுக்குங்கள். தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.புளியை இரண்டரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களைஒன்றாகச் சேர்த்து வடிகட்டுங்கள். எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களை சேர்த்து,வெங்காயம் சேருங்கள். இது நிறம் மாறி வதங்கியதும், தக்காளி, முருங்கை, உப்பு, மிளகாய்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள் பிறகு, புளிக்கரைசல், அரைத்த விழுது,மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போக கொதித்த பிறகு இறக்குங்கள்.சப்பாத்தி, சாதத்துக்கு ஏற்ற சைட் - டிஷ் இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெங்காயம் அரைத்த குழம்பு, 30 வகையான குழம்பு, 30 Type Kuzhambu, டீஸ்பூன், சேர்த்து, கறிவேப்பிலை, வெங்காயம், Recipies, சமையல் செய்முறை