கொத்தவரங்காய் பஜ்ஜி
தேவையானவை: பிஞ்சு கொத்தவரை - 100 கிராம், கடலை மாவு - 1 கப், அரிசி மாவு - 1டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் - 1 டீஸ்பூன், பெருங்காயம் - அரை டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப,எண்ணெய் - தேவையான அளவு, ஆப்ப சோடா - அரை சிட்டிகை.
செய்முறை: கொத்தவரங்காயை நுனியையும் காம்பையும் கிள்ளிவிட்டு, அலசுங்கள். 3 கப்தண்ணீரை கொதிக்கவைத்து சிறிது உப்பு, கொத்தவரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு வடிகட்டுங்கள். ஒரு பேப்பரையோ அல்லது துணியையோ விரித்து, அதன் மேல் காயைக் கொட்டிவிரித்துவிட்டு அரை மணி நேரம் உலர விடுங்கள். மாவுடன் மிளகாய்தூள், உப்பு, பெருங்காயம்,ஆப்ப சோடா, தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரையுங்கள். எண்ணெயைகாய வைத்துகொள்ளுங்கள். கொத்தவரையை மாவில் போட்டு நன்கு கலந்துகொள்ளுங்கள். காயும் எண்ணெயில் சிறிது சிறிதாக கிள்ளிப்போட்டு நன்கு வேக விட்டு எடுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கொத்தவரங்காய் பஜ்ஜி, 30 வகையான பஜ்ஜி-பக்கோடா, 30 Type Bajji Bakoda, உப்பு, மாவு, Recipies, சமையல் செய்முறை