தொழில் நுட்பத்தின் உச்சம் ! - சர்தார்ஜி ஜோக்ஸ்
ஒரு முறை, ஒரு அமெரிக்கர், ஒரு ஜப்பானியர் மற்றும் ஒரு சர்தார் ஒரு பொழுதுபோக்கு நிலையத்தில் (Recreation club !) அமர்ந்திருந்தனர். அப்போது திடீரென ஒரு 'பீப்,பீப்' ஒலி எழும்பியது. உடனே அந்த அமெரிக்கர் தன் மணிக்கட்டை அழுத்த அந்த ஒலி நின்றது! அவர், "என் பேஜர் எழுப்பிய ஒலி தான் அது. என் மணிக்கட்டின் தோலுக்குக் கீழே ஒரு மைக்ரோ சிப் பதிக்கப்பட்டுள்ளது!" என்று பெருமிதப்பட்டார் !
சில நிமிடங்களுக்குப் பின், ஒரு தொலைபேசி மணியொலி கேட்டது. உடனே அந்த ஜப்பானியர் தன் வெறும் உள்ளங்கையை காதுக்கு அருகே வைத்துப் பேசிவிட்டு பின்னர் பெருமை பொங்க, "அது எனது செல்·போன். அதற்காக, என் உள்ளங்கையில் ஒரு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது!" என்று கூறியவுடன் நமது சர்தாருக்கு அவரது தொழில்நுட்பக் கீழ்நிலை குறித்து மிக்க மனவருத்தம் ஏற்பட்டது.சர்தாருக்கு கழிவறை செல்ல வேண்டியிருந்ததால், அவ்விடத்திலிருந்து அகன்றார். அங்கிருந்து திரும்பியவுடன், அவரது பின்புறத்தில் கழிவறைக் காகிதம் தொங்கிக் கொண்டிருப்பதை அவர் கவனிக்கவில்லை. மற்ற இருவரும், "என்ன இது ?" என்று கிண்டலாக கேட்டனர்.உடனே நமது புத்திசாலி சர்தார், சமயோஜிதமாக, "ஓ, அதுவா ? எனக்கு ·பேக்ஸில் (FAX) தகவல் வந்திருக்கிறது!!!" என்று ஒரு போடு போட்டார் !!!!!!!!!! மற்ற இருவரும் வாயடைத்து நின்றனர்.============
இரு பாகிஸ்தானியர்கள் வாஷிங்டனிலிருந்து நியூயார்க் செல்லும் விமானத்தில் ஏறி, ஒருவர் ஜன்னலை ஒட்டிய இருக்கையிலும், இன்னொருவர் நடு இருக்கையிலும் அமர்ந்தனர். விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஒரு பருமனான சர்தாஜி அந்த பாகிஸ்தானியர்கள் பக்கத்தில் இருந்த (நடையை ஒட்டிய) இருக்கையில் அமர்ந்தார்!அமர்ந்தவுடன், தன் கால்களை சற்று இளைப்பாற்ற காலணிகளை களைந்தவுடன், ஜன்னலருகில் அமர்ந்திருந்த பாகிஸ்தானி, "நான் சென்று ஒரு கோக் எடுத்து வருகிறேன்" என்றார். உடனே நல்ல மனம் கொண்ட நம் சர்தார்ஜி, "நீங்கள் இருங்கள், நான் போய் எடுத்து வருகிறேன்!" என்று கூறி காலுறைகளுடன் நடந்து சென்றார்.
சர்தார் சென்றவுடன், அந்த பாகிஸ்தானி, சர்தாரின் காலணிக்குள் எச்சில் துப்பி, வைத்து விட்டார். சர்தார் கோக்குடன் வந்தவுடன், இன்னொரு பாகிஸ்தானி, "எனக்கும் கோக் அருந்த வேண்டும் போலுள்ளது" என்றவுடன், சர்தார் தயாள மனதுடன், "கவலைப்படாதீர்கள்! நான் போய் உங்களுக்கும் ஒன்று எடுத்து வருகிறேன்!" என்று மறுபடியும் சென்றார். அந்த நேரத்தில், அதே பாகிஸ்தானி இப்போது சர்தாரின் மற்றொரு காலணியிலும் எச்சில் துப்பி வைத்து விட்டார்!!!
சிறிது நேரத்தில், விமானம் தரை இறங்கத் தொடங்கியது. சர்தார் காலணிகளுக்குள் தன் கால்களை நுழைத்தவுடன், நடந்த நிகழ்வை யூகித்து புரிந்து கொண்டு விட்டார்!!! மிகுந்த வேதனையுடனும் மனவலியுடனும், பாகிஸ்தானியர்களை பார்த்து கூறினர் " இன்னும் எவ்வளவு நாள் இவை நீடிக்க வேண்டும்! நம்மிடையே நிலவும் இந்தப் பகை ... வெறுப்புணர்வு ... தீங்கு செய்ய நினைக்கும் மனோபாவம் ... காலணிகளுக்குள் எச்சில் துப்புதல், கோக்கில் சிறுநீர் கழித்தல் !!!!!!"
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 95 | 96 | 97 | 98 | 99 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தொழில் நுட்பத்தின் உச்சம் ! - சர்தார்ஜி ஜோக்ஸ், ", ஜோக்ஸ், சர்தார்ஜி, அந்த, சர்தார், jokes, பாகிஸ்தானி, உடனே, தொழில், எடுத்து, நான், நுட்பத்தின், உச்சம், எச்சில், விட்டார், கால்களை, வைத்து, நேரத்தில், போய், கோக், வருகிறேன், காலணிகளுக்குள், வேண்டும், சர்தாரின், சென்றார், துப்பி, மற்ற, பீப், அவர், மைக்ரோ, ஜப்பானியர், அமெரிக்கர், சிரிப்புகள், நகைச்சுவை, சிப், நமது, ஒட்டிய, இருக்கையிலும், பாகிஸ்தானியர்கள், இருவரும், சர்தாருக்கு, அவரது, விமானம்