தமிழனா ஆக்கிடு - சர்தார்ஜி ஜோக்ஸ்
ஒரு தடவை 3 சர்தார்ஜிங்க ஆற்றுக்கு அந்தப் பக்கமா மாட்டிக்கிட்டாங்க.. என்ன செய்யறதுன்னு தெரியலே.. கடவுளை வேண்டுனாங்க..
கடவுளுக்கு வேறே முக்கியமான ஜோலி இருந்ததாலே ஒரு கந்தர்வனை அனுப்பினாரு..
அவன் 3 சிங்கு முன்னால தோன்றி ஆளுக்கு ஒரு வரம் கேளுங்கன்னான்..
முதல் சிங்கு, ஆத்துக்கு அந்தப் பக்கம் என்னோட அறிவை பயன்படுத்திப் போகணும்.. அதுக்கு வழி சொல்லு" ன்னு கேட்க..
அதுக்கு கந்தர்வன்.. "ஆகற வழியப்பாரு.. வேறே ஏதாவது உருப்படியா கேளு" ன்னான்..
சிங்கு," அப்படின்னா என்னை தெலுங்கு காரனா ஆக்கிடு" ன்னாரு. உடனே கை ரெண்டும் வலுவா மாறிடுச்சு.. சொய்ங் ன்னு தண்ணியில குதிச்சு நீச்சல் அடிச்சுப் போயிட்டான்..
ரெண்டாவது ஆள், " என்னை மலையாளத்தானா மாத்திடு" ன்னு சொல்ல உடனே உடம்பு வலுவா ஆயிடுச்சு.. பக்கத்தில இருந்த மரத்த ஒடைச்சு தெப்பம் செஞ்சு அதுல ஏறிப் போயிட்டாரு..
மூணாவது சிங்கு," என்னை தமிழனா ஆக்கிடு... ன்னாரு. உடனே புத்தி வலுவா மாறிடுச்சு.. பக்கத்துல இருந்த பாலத்து வழியா அக்கரைக்குப் போயிட்டாரு..
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 96 | 97 | 98 | 99 | 100 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழனா ஆக்கிடு - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், சர்தார்ஜி, jokes, தமிழனா, ", சிங்கு, ஆக்கிடு, உடனே, வலுவா, ன்னு, என்னை, மாறிடுச்சு, இருந்த, போயிட்டாரு, வேறே, சிரிப்புகள், நகைச்சுவை, அந்தப், ன்னாரு, அதுக்கு