கலைவாணரின் அறிவாற்றல் - சிரிக்க-சிந்திக்க

எழுத்தாளர்கள் தங்கள் பேனாவை எப்படிப்பட்ட மையைத் தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா? - என்று கலைவாணர் அவர்கள் கேட்டதும் மக்கள் அனைவரும். "பேனா மைதான். கருப்பு மை, நீல மை மற்றும் சிகப்பு மையாகத்தான் இருக்கும்" என்று சொன்னார்களாம்.
"அப்படி இல்லை" என்று கலைவாணர் அவர்கள் சொன்ன பதில்:
"சிலர் பெருமையில் தொட்டு எழுதுகிறார்கள். வேறு சிலர் பொறாமையிலும் தொட்டு எழுதுகிறார்கள். சிலர் தற்பெருமையில் தொட்டு எழுதுகிறார்கள். சிலர் பழமையிலும் தொட்டு எழுதுகிறார்கள்.
ஆனால் தொடக்கூடாத மைகள், மடமை, கயமை, பொய்மை, வேற்றுமை.
நன்மை தரக்கூடிய செம்மை, நேர்மை, புதுமை ஆகியவற்றைத் தொட்டு வாசகர்களின் நெஞ்சைத் தொடும்படியாக எழுத வேண்டும்.
அவர்கள் நீக்க வேண்டிய மைகள் வறுமை, ஏழ்மை, கல்லாமை, மடமை, அறியாமை."
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 75 | 76 | 77 | 78 | 79 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலைவாணரின் அறிவாற்றல் - சிரிக்க-சிந்திக்க, தொட்டு, ஜோக்ஸ், எழுதுகிறார்கள், ", சிலர், jokes, சிந்திக்க, சிரிக்க, அறிவாற்றல், கலைவாணர், கலைவாணரின், மடமை, மைகள், சர்தார்ஜி, எழுத்தாளர்கள், நகைச்சுவை