சொர்க்கத்திலே முடிவானது! - சிரிக்க-சிந்திக்க
மாப்பிள்ளைக்கு இருக்கும் ஒரே கெட்ட பழக்கம்!
அவன் ஒரு 'காபி பிரியன்'.
இதை ஏற்கனவே சொந்தகாரர்கள் மூலம் அறிந்து கொண்ட பெண் வீட்டார், பொண்ணு அவள் கையால் போட்ட காபி என்று சொல்லி அவள் கையாலே காபியை பறிமாற வைத்து விட்டார்கள்,
அப்படி ஒரு காபியை அவன் இதுவரை குடித்ததே இல்லை!
அவ்வளவு சுவை...
அவன் மெய்மறந்து குடித்து கொண்டிருக்கும் போது,,,
'என்ன மாப்ள காபி புடிச்சிருக்கா ??' என்று பெண்ணின் தகப்பனார் கேட்க,
அதே நேரத்தில் 'என்ன தம்பி பொண்ண புடிச்சிருக்கா' என்று பையனின் சித்தப்பா கேட்க ,
"ரொம்ப புடிச்சிருக்கு,, சான்சே இல்ல,," என்று மாப்பிள்ளை சொல்லி விட்டார்.
அப்புறம் என்ன?
'பையனே பொண்ண ரொம்ப புடிச்சிருக்குன்னு சொல்லிட்டன்' என்று சொல்லி சித்தப்பா தட்டை மாற்றிவிட்டார்.
கல்யாணமும் முடிந்து விட்டது.
முதலிரவில்,, நம்ம மாப்ள தன் மனைவியின் கையை பிடித்து கொண்டு, "எனக்கு சுவையான காபியை போட்டுத்தந்த இந்த கைக்கு அன்னைக்கே முத்தம் குடுக்கனும்னு நெனச்சேன்,, ஆனா உங்க அப்பா திட்டுவாருன்னு பேசாம போயிட்டேன்"
"நீங்க அன்னைக்கே முத்தம் குடுத்திருந்தாலும் எங்க அப்பா ஒன்னும் சொல்லி இருக்க மாட்டாரு, ஏன்னா அந்த காப்பிய போட்டதே எங்க அப்பா தான். அதனால தான் காபி எப்படி இருக்கு மாப்ளன்னு ரொம்ப ஆர்வமா உங்க கிட்ட கேட்டாரு?"
"அப்புறம் எதுக்கு நீ போட்டதுன்னு உங்க அம்மா பொய் சொன்னாங்க ??"
"அந்த பொய்ய சொல்ல சொன்னதே உங்க அம்மாவும் உங்க சித்தியும் தான். எனக்கு பொய் சொல்ல தெரியாது. எனக்கு அடுப்பு கூட பத்த வைக்க தெரியாதுன்னு அப்பவே அவங்க கிட்ட உண்மைய சொல்லிட்டேன்"
நீதி : திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்க படுவதில்லை, சொந்த காரர்களால் நிச்சயிக்கப்படுகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 66 | 67 | 68 | 69 | 70 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சொர்க்கத்திலே முடிவானது! - சிரிக்க-சிந்திக்க, ", ஜோக்ஸ், உங்க, காபி, அவன், சொல்லி, jokes, என்ன, அப்பா, எனக்கு, ரொம்ப, காபியை, சொர்க்கத்திலே, தான், சிந்திக்க, முடிவானது, சிரிக்க, முத்தம், சொல்ல, பொய், அந்த, கிட்ட, எங்க, அன்னைக்கே, புடிச்சிருக்கா, பெண், நகைச்சுவை, சர்தார்ஜி, அவள், மாப்ள, சித்தப்பா, பொண்ண, கேட்க, அப்புறம்