கணவன் மனைவி ஜோக்ஸ் 13 - கணவன் மனைவி சிரிப்புகள்
கணவன் : "சேலை புதுசா?"
மனைவி : "நீங்கதானே என் கூட வந்து, இதை பார்த்து, கடையிலேயே ரொம்ப நல்லா இருக்குது..... நல்லா இருக்குதுனு சொல்லிக்கிட்டு இருந்தீங்க. நீங்க வாங்கி கொடுத்தது தான்."
கணவன் மனதுக்குள்: " கடையில் வைத்து நல்லா இருக்குதுன்னு சொன்னது, இந்த சாரியை பாத்துனு நினைச்சிட்டா போல.அபாடா நான் தப்பிச்சேன்."
-***-
மனைவி : ”என்னங்க, அழகான பொண்ணுங்களை எப்படி நினைக்கணும் ?”
கணவன் : ”உன் தங்கச்சியா நினை !”
-***-
கணவன் : எதுக்கு விமலா .... பத்து டீ ஸ்பூன்
மனைவி : சாம்பாருக்கு பத்து டீ ஸ்பூன் மிளகாய்தூள் போடனும்னு போட்டிருக்கே அதான்...
-***-
கணவன் : “இந்தத் தீபாவளிக்கு உனக்குப் பட்டுப் புடவை!“
மனைவி : “அப்படியா! எதை வச்சி சொல்லுறீங்க?“
கணவன் : “உன் வளையலை வைச்சுத்தான் சொல்லுறேன்.“
-***-
கணவன் : என்ன விமலா திடீர்னு நீயே சமையல் பண்றேங்கற?
மனைவி : உங்க சமையல் கை பக்குவத்தை பார்த்தாங்கன்னா விருந்தாளிங்க இரண்டு நாள் கூட இருந்திடுவாங்க அதான்....
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 25 | 26 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கணவன் மனைவி ஜோக்ஸ் 13 - கணவன் மனைவி சிரிப்புகள், கணவன், மனைவி, ஜோக்ஸ், ", jokes, சிரிப்புகள், நல்லா, அதான், சமையல், ஸ்பூன், நகைச்சுவை, kadi, விமலா, பத்து