கணவன் மனைவி ஜோக்ஸ் 25 - கணவன் மனைவி சிரிப்புகள்
மனைவி : அத்தான்... உங்களை கணவராக அடைய நான் நிறைய கொடுத்து வைத்தவள்...
கணவன் : உங்கப்பாகிட்ட வரதட்சணை வாங்கியதை இப்படிக் குத்திக் காட்டிப் பேசாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்.
-***-
கணவன் : உன் போட்டோவா இது...எனக்கே சந்தேகமா இருக்கு...
மனைவி : என் மேலே இருக்கிற சந்தேகம் எப்பதான் உங்களுக்குத் தீரப் போகுதோ...
-***-
மனைவி : என்னங்க...உங்க சட்டையெல்லாம் எண்ணையா இருக்கு...?
கணவன் : ஆபிஸில தலைவலின்னு டைப்பிஸ்ட் என் மேலே கொஞ்சம் சாய்ந்திருந்தாள்.
-***-
மனைவி : கல்யாணம் ஆகி இந்த இருபது வருசத்தில நான் என்ன சுகத்தைக் கண்டேன்...?
கணவன் : மூணு மாசத்தைக் குறைத்து விட்டாயேடி...?
மனைவி : ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள். அதை ஏன் சேர்க்கறீங்க...?
-***-
கணவன் : இந்த சேலை கட்டியிருக்கும் போது நீ மகாலட்சுமி மாதிரியே இருக்க...
மனைவி : யாருங்க அந்த மகாலட்சுமி ?
கணவன் : எங்க ஆபிஸ் டைப்பிஸ்ட்...!
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கணவன் மனைவி ஜோக்ஸ் 25 - கணவன் மனைவி சிரிப்புகள், கணவன், மனைவி, ஜோக்ஸ், jokes, சிரிப்புகள், நாள், டைப்பிஸ்ட், மகாலட்சுமி, மேலே, நகைச்சுவை, kadi, நான், இருக்கு