கேள்வி எண் 98 - சட்டக்கேள்விகள் 100
98. என் கணவரும், அவர் குடும்பத்தாரும் வரதட்சணை கொடுமை செய்து என்னை துரத்திவிட்டனர். என்ன நடவடிக்கை எடுப்பது?
வழக்குரைஞர் குணசேகரன் அவர்களுக்கு வணக்கம், எனக்கு கடந்த அக்டோபர் 2013ல் திருமணம் நடந்தது. எனது பெற்றோர் வரதட்சணைக்காக பணமும், வீட்டு உபயோகப்பொருட்களும், காரும் கொடுத்து திருமணம் நடத்தி வைத்தார். தற்போது என் கணவரின் குடும்பத்தார்கள் என் பிறந்த வீட்டிற்குச் சென்று மேலும் பணம் வாங்கி வரும்படி துன்புறுத்துகின்றனர். நான் மறுக்கும் போது அனைவரும் சேர்ந்து என்னை அடிக்கின்றனர். இதற்கிடையில் என் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரிந்து அவரைத் தட்டிக்கேட்டேன். என்னை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி, கொடுமைப் படுத்தியதுடன் ரத்தக் காயம் வரும்படி என்னை அடித்து உதைத்தார். வீட்டிலுள்ள அனைவரும் சேர்ந்து என்னை வீட்டை விட்டு வெளியே துரத்தி கதவை தாழிட்டுக் கொண்டனர். நான் வேறுவழியில்லாமல் என் அம்மா வீட்டிற்கு வந்துவிட்டேன். இதுவரை அவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை. ஆகையால், தற்போது நான் என்ன செய்ய வேண்டும்? அவர்கள் மீது எப்படி புகார் அளிக்க வேண்டும் என்று கூறினால் மிகவும் கடமைப்பட்டுள்ளவளாக இருப்பேன்.
- E .சிந்து, ராஜபாளையம்
பதில் :
உங்கள் திருமணத்தினால் உங்களுக்கு எந்த எதிர்காலமும் இல்லை என்று நினைப்பதுடன் விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம் என்ற முடிவிற்கு நீங்கள் வந்திருப்பின், நீங்கள் பிரிவு 498A ன்கீழ் அருகிலுள்ள காவல்நிலையத்தில் புகார் அளியுங்கள். நீங்கள் சீதனமாகவும், வரதட்சணையாகவும், பணமாகவும் கொடுக்கப்பட்டதை மீண்டும் பெறுவதற்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 406 ன் மூலம் மேற்கண்ட பிரிவுடன் சேர்த்து புகார் அளிக்கலாம். பொதுவாக, காவல்துறையினர் பிரிவு 498A மற்றும் பிரிவு 406 ன் கீழ் வழக்கு பதிவு செய்வர்.
மேலும் குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழும் (Domestic ViolanceAct), நீதிமன்றத்தில் நீங்கள் வழக்குத் தாக்கல் செய்யலாம். பின்னர், கொடுமைப்படுத்துதல், பாலியல் வன்முறை மற்றும் வரதட்சணை கொடுமையை முன்னிறுத்தி விவாகரத்து வழக்கு தொடுக்கலாம்.
காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுத்தால், பிரிவு 156 (3) ல் உயர்நீதிமன்றத்தில், FIR பதிவு செய்யக்கோரி ஆணை பெறுவதன்மூலம் நீங்கள் உரிய நிவாரணம் பெற முடியும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, நீங்கள், பிரிவு, என்னை, புகார், நான், பதிவு, வேண்டும், 498a, விவாகரத்து, செய்ய, வழக்கு, எந்த, தற்போது, திருமணம், என்ன, மேலும், வரும்படி, வரதட்சணை, சேர்ந்து, அனைவரும், இல்லை