கேள்வி எண் 90 - சட்டக்கேள்விகள் 100
90. நான் எனது அத்தை மகளை சட்டப்படி திருமணம் செய்யலாமா?
ஐயா நான் எனது அத்தை மகளை மணக்கலாம் என்றிருக்கிறேன், ஆனால் அத்தை மகளை (நெருங்கிய உறவு முறை) என்பதால் திருமணம் செய்யக்கூடாது என்று சில பெரியோர்கள் அறிவுறுத்துகிறார்கள். இது சரியா ?
A. வல்லரசு, திருச்சி
பதில் :
பொதுவான பழக்கத்தால் அனுமதிக்கப்பட்டாலன்றி விலக்கப்பட்ட உறவுமுறைகளுக்குள் திருமணம் செய்துகொள்ள முடியாது. தமிழ்நாட்டில் தாய்மாமன் மகளை அல்லது அத்தை மகளை திருமணம் செய்வது பழக்கத்தின் அடிப்படையில் பரவலாக உள்ளது. சட்டப்படி பார்த்தால் ரத்த அடிப்படையில் இது தடுக்கப்பட்ட உறவாகும். தாய்வழியில் ஐந்து தலைமுறையும் தகப்பன் வழியில் ஏழு தலைமுறையும் உறவினராக இருக்கக்கூடாது. ஆனால் சமூக சம்பிரதாயங்களின் அடிப்படையில் இவ்வாறு திருமணம் அனுமதிக்கப்படுமானால் சட்டம் அந்தத் திருமணத்தை ஏற்றுக் கொள்கிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, திருமணம், மகளை, அத்தை, அடிப்படையில், தலைமுறையும், சட்டப்படி, நான், எனது