கேள்வி எண் 7 - சட்டக்கேள்விகள் 100
7. நாம் வாங்கும் சொத்தின் மீது நீதிமன்றத்தில் ஏதேனும் வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடியுமா?
ஐயா, நான் சமீபத்தில்தான் அரசு நிறுவனத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்றேன். என்னுடைய ஓய்வூதியத்தினை கொண்டு சென்னையை அடுத்து மறைமலைநகரில் ஒரு சொத்து வாங்குவதற்காக அனைத்து பத்திரங்களையும் ஒரு வழக்குரைஞர் மூலம் சரிபார்த்து கொண்டேன். ஆனால் அருகில் உள்ளவர்கள் இந்த சொத்தின் மீது நீதிமன்ற வழக்கு உள்ளது என்று அரசல் புரசலாக பேசுகிறார்கள். இது சம்பந்தமாக வழக்குகள் ஏதேனும் நிலுவையில் உள்ளதா என்று தெரிந்து கொள்ள முடியுமா?
- M.சுந்தர்ராமன், மதுரை.
பதில் :
நல்ல கேள்வி. Encumbrance Certificate மூலம் சொத்து மீது ஏதும் கடன் உள்ளதா என அறிய முடியுமே ஒழிய, அந்த சொத்து சம்பந்தமாய் வழக்கு ஏதும் நிலுவையில் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள முடியாது.
சொத்தை விற்பவர் எவரும் அதன் மீது வழக்கு நிலுவையில் இருந்தால் அதைப் பற்றி மூச்சுவிட மாட்டார்கள். அது வெளியில் தெரிந்தால் யாரும் சொத்தை வாங்க முன் வர மாட்டார்கள் என்பதே அதற்குக் காரணம்!
இந்நிலையில் சொத்து மீது வழக்கு ஏதும் உள்ளதா? என்பதை அறிய ஒரே வழி ரகசியமாக (Discreet) அக்கம் பக்கம் விசாரித்து பார்ப்பது தான்! அநேகமாய் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு சொத்து மீது வழக்கு இருந்தால் தெரிய வாய்ப்புண்டு. அவர் மூலம் இதை தெரிந்து கொண்டு, அதற்குப்பிறகு சொன்னவர் பெயரை சொல்லாமல் சொத்து உரிமை யாளரிடம் “இப்படி ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதாமே?” என கேட்கலாம். விஷயம் உங்களுக்கு தெரிந்து விட்டது என்றபின், அவர் முழு விஷயமும் பகிர்ந்துகொள்ள வாய்ப்புண்டு!
உண்மையில் கடன்கள் எப்படி வில்லங்கச் சான்றிதழில் (Encumbrance Certificate) தெரிகின்றனவோ, அதேபோல் வழக்கு களும் தெரிந்தால் நன்றாக இருக்கும்தான்! அரசு ஏதேனும் இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுத்தால் நலம்!
ஆங்கிலத்தில் “Caveat Emptor” என்பார்கள். இதற்கு அர்த்தம் “Let the buyer be aware” - ஒரு பொருளை வாங்குபவர்தான் ஜாக்கிரதை உணர்வோடு இருக்க வேண்டும். விற்பவர் சிறுசிறு குறைகள் இருந்தாலும் அவற்றை மறைத்து விற்கக்கூடும்! நாம்தான் தீர விசாரித்து அறிய வேண்டும்!
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, வழக்கு, சொத்து, மீது, உள்ளதா, தெரிந்து, நிலுவையில், மூலம், என்பதை, அறிய, ஏதேனும், ஏதும், தெரிந்தால், மாட்டார்கள், இருந்தால், விசாரித்து, வாய்ப்புண்டு, வேண்டும், அவர், விற்பவர், சொத்தை, சொத்தின், அரசு, encumbrance, certificate, கொள்ள, முடியுமா, கொண்டு