கேள்வி எண் 6 - சட்டக்கேள்விகள் 100
6. என் கணவருக்கு கடன் கொடுத்தாகக் கூறி தினமும் என்னை தொந்தரவு செய்கிறார்கள். என்ன நடவடிக்கை எடுப்பது?
சார் எனது கணவர் ஒரு பெரிய குடிகாரர். நான் வீட்டு வேலைக்குச் சென்றுதான் என் குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன். அவர் சம்பாதிக்கும் பணத்தில் தினமும் குடித்துவிட்டு எங்காவது ரோட்டில் விழுந்துவிடுவார். தினமும் முகம் தெரியாதவர்கள் சிலர், நான் உன் கணவருக்கு பத்தாயிரம் ரூபாய் தந்தேன், ஐந்தாயிரம் ருபாய் தந்தேன். அதை நீதான் கொடுக்க வேண்டும் என்று என்னை தொந்தரவு செய்கிறார்கள். நான் காவல்நிலையத்தில் அவர்கள் மீது புகார் அளித்ததன் பேரில் போலீசும் அவர்களை அழைத்து “அவர் வாங்கும் கடனுக்கு அந்த அம்மா என்ன செய்யும், நீங்கள் அந்த அம்மாவிடம் சென்று பணம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது” என்று மிரட்டி எழுதியும் வாங்கி விட்டார்கள்.
என் கணவரே ஆயினும் இவர் வாங்கும் கடன்களுக்கு நான் அல்லது நாங்கள் பொறுப்பாளி அல்ல என்ற உத்திர வாதத்தை நான் பெறமுடியுமா ?
தற்சமயம் அவர் உயிருடன்தான் இருக்கிறார் என்றாலும் அவர் காலத்துக்குப் பின்னும் கடன் தீர்க்கும் பிரச்னை இல்லாமல் இருக்க வழி உண்டா?
- E. பெரியநாயகி, கோவை
பதில் :
உங்கள் பிரச்னை மிக சிக்கலானதுதான். நீங்கள் குறிப்பிட்டது போல “காவல்நிலையத்தில் எழுதி வாங்கப்படும் ஸ்டேட்மெண்ட் மட்டுமே உங்கள் கணவர் வாங்கும் கடன்களுக்கு நீங்கள் பொறுப்பேற்க முடியாது என்று அர்த்தமாகாது”.
இந்திய சட்டப்படி ஒருவர் மரணம் அடைந்தபின் அவரது சொத்துக்கள் எப்படி அவர் வாரிசுகளுக்கு வருகிறதோ, அதே போல் அவரது கடன்களும் அவரது வாரிசுகளுக்குத்தான் வரும்.
ஒருவேளை அவரது மறைவுக்கு பின் கடன் கொடுத்தவர்கள் நீதி மன்றத்தை நாடினால் அவரது கடன்களுக்கு, அவர் குடும்பத்தினர் தான் பொறுப்பு என சொல்லக்கூடும்.
இப்போதைக்கு “யாரிடம் கடன் வாங்கினாரோ அவரிடமே எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை” என சொல்லலாம். அல்லது கணவரை பற்றி காவல்துறையில் புகார் அளித்து, காவல்துறையினரை விட்டு “இப்படி குடிக்காதீர்கள், கடன் வாங்காதீர்கள்” என சொல்லச்சொல்லலாம். இவைதான் எனக்குத் தெரிந்தவரை உள்ள இப்போதைக்கான தீர்வுகள். அதுவும் சரிபட்டு வரவில்லையென்றால் கடைசி ஆயுதம் அவரிடமிருந்து நிரந்தரமாக பிரிவதுதான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, அவரது, நான், அவர், கடன், தினமும், நீங்கள், வாங்கும், கடன்களுக்கு, தொந்தரவு, பிரச்னை, உங்கள், அந்த, அல்லது, புகார், என்ன, செய்கிறார்கள், கணவர், கணவருக்கு, தந்தேன், என்னை