கேள்வி எண் 39 - சட்டக்கேள்விகள் 100
39. No Parking ஏரியாவில் அரசு வாகனங்களை நிறுத்த அனுமதி உள்ளதா?
ஐயா, நான் பாரிமுனையில் அவசரமாக எனது காரை No Parking-ல் நிறுத்தி விட்டேன். அதே இடத்தில் அரசு வாகனங்கள் சிலவும் நிறுத்தப்பட்டு இருந்தன. எனது வண்டியை லாக் செய்து அபராதம் விதித்து விட்டார்கள். அரசு வாகனங்கள் நிற்பதை சுட்டிக்காட்டி நியாயம் கேட்டேன். “உன் வேலையைப் பார். அபராதத்தை கட்டி விட்டு கிளம்பு” என்று சார்ஜெண்ட் கூறிவிட்டார். இது சரியான நடைமுறையா?
- X.அலெக்ஸ், சென்னை
பதில் :
நீங்கள் No Parking-ல் வண்டியை நிறுத்தியது சட்டப்படி தவறு. அதே வேளையில் அரசு வாகனங்கள் அங்கு நிறுத்தப்பட்டு இருந்ததும் தவறே.
நீங்கள் அப்போதே உயர்அதிகாரிகளை தொடர்புகொண்டு விவரத்தைக் கூறியிருக்கலாம். அல்லது ஆதாரத்துடன் புகைப்படம் எடுத்து அதிகாரிகளுக்கு அனுப்பி இருக்கலாம். அல்லது புகைப்பட ஆதாரத்துடன் நீதிமன்றத்தை அணுகி நீதியைப் பெற்றிருக்கலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, அரசு, parking, வாகனங்கள், அல்லது, ஆதாரத்துடன், நீங்கள், நிறுத்தப்பட்டு, எனது, வண்டியை